பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருதப்படுகிறது. இந்துஸ்தானி, மெய்யில் முடியும் மொழியும், பாட்டின் இறுதியில் ஒரு வகையான அகரம் போன்ற இழுப்பொலியும் உடையதாயிருப்பதே அதன் இனிமைக்குக் காரணம். இத்தாலியத்திலும் பிரஞ்சிலும் உயிரோடு மென்மையும், சிறுபான்மை இடையும் ஈற்றில் வரும். பின் கூறியவையும் உயிர்போல் நீட்டி இசைக்கக்கூடிய ஒலியே என்பதை ஒலித்துப் பார்க்கவும். உயிரை அளபெடுத்து நீட்டுவதுபோல் (ஆ அ, ஆ அ அ என்று) இடையையும் மென்மையையும், (இன்ன்ன் என்று) (வால்ல்ல் என்று) அளபெடுக்க முடிவது காண்க. தமிழ் இவ்வகையில் தெலுங்கை அண்டியிருப்பினும், இத்தாலி பிரஞ்சு மொழிகளை முற்றிலும் ஒத்திருத்தல் காண்க. மென்மையும், இடையும் அளபெடுக்கும் வகையில் உயிர்போன்றது என்று கூறினோம். இனிமை வகையில் உயிரினும் இடை இனிமை என்றுங் காணலாம். ஆக, சொல் முடிபுவகையில் தமிழ்மொழி பெரிதும் இனிமை மிக்கதெனக் காணக்கூடும். சொல்லில் இடை எழுத்துகளையும் முதல் எழுத்து களையும் பார்த்தால், தெலுங்கே செயற்கை ஒலியும் முரணொலியும் மிகுதியுடையது எனவும், தமிழ் உலகின் எல்லா மொழிகளிலும் இனிமையுடையது எனவும் காணக்கூடும். தெலுங்கில் "நனுப்ரோவமய" என்ற பதத்தில், 'ப்ரோ' எனத் தொடங்குவது 'போ' என இருந்தால், அழகும் ஒலியியல்பும் மிகுதி என்பதைச் செவியுணர்வால் காண்க. மற்றும் தமிழ் ஒலிக்கு மாறான வடமொழியில் கீர்த்தனங்கள் இயற்றிய ஜயதேவரும், அவர்க்கு வழிகாட்டியாக இருந்த தென்னாட்டுச் சங்கரரும் வடமொழியில் இனிய பாட்டுகள் எழுதியது தமிழ் ஒலிப்பை-ஒலி முறையை ஒட்டித்தான் என்பதை அவற்றின் சொல்லொழுக்கால் காண்கிறோம். தெலுங்கிலும் இத்தகைய இனிமை ஏற்பட்டது, தமிழ்நாட்டிலிருந்த தியாகராயரால் என்பதும் காண்க. தமிழின் சுவையறிந்த சங்கரர், வடமொழியில் அச்சுவையை வருவித்தது போல், தியாகரும் அதனைத் தெலுங்கில் ஏற்றினார் என்க. 'இப்படியாயின் தெலுங்கு இனிமை என்று பிறர் சொல்லுவதேன்? நம் காதுக்குக்கூடத் தெலுங்கு ஒலி இனிமையாகத்தானே தோன்றுகிறது? இசையில் ஈடுபட்டார்