பலர் இவ்வாறு கூறுவது ஏன்?' என்று கேட்கப்படலாம், இதன் விடை எளிது. தமிழ் நாட்டில் கலைஞர் பலரும் தம் திறத்தை எல்லாம் காட்டி அழகிய தெலுங்குப் பதங்களைத் தெரிந்தெடுத்து வழங்கியுள்ளனர். ஆகவே, தெலுங்கிசையின் இன்றைய இனிமை தெலுங்கின் இனிமை மட்டுமன்று, கலைஞர்களின் ஒலித்தேர்வும் சேர்ந்ததாகும். எப்படியெனில், காட்டுவோம்:- இன்று இனிமை மிக்க மொழிகள் என மேனாடுகளில் பிரஞ்சும் இத்தாலியமுமே கருதப்படுகின்றன. ஆங்கிலம் இனிய ஒலி குறைந்தது. மிகவும் முரணொலிகளே நிறைந்த மொழி ஜருமனாகும். ஆனால், உலகின் இசையரசரான பீதவன், ஹான்டெல், மோஸார்ட் முதலியவர்கள் தோன்றி இம்மொழிகளில் இசை இலக்கியங்கள் ஏற்படுத்தினர். அவை இத்தாலிய மொழியிலும் பிரஞ்சு மொழியிலும் உள்ள இசை இலக்கியங்களைவிட இனிமையாகக் கருதப்படு கின்றன. அதன் காரண மொழியன்று; ஆசிரியரின் ஆற்றலேயாகும். ஆகவே, தெலுங்கில் இனிய இசை அமைந்ததும், தமிழில் அமைவு குறைவுபட்டதும், அல்லது பட்டதாகத் தோற்றுவதும் அதைத் தமிழில் அமைத்தவர் குறைவு என்பதனாலேயே. இன்றும் பயில்பவர் தெரிபவர்,போற்றுபவர் குறைவு என்பதனாலுமே அது நேரும் என்று உணர்க. மேலும். தமிழ் தெலுங்கைவிட இனிமை குறைவு என்று வைத்துக் கொண்டாலும்கூடத் தமிழில் இசைப் பாடல்கள் ஏற்படுவது என்பது முடியாத காரியமன்று. இனிமை குறைந்த ஆங்கிலத்திலும், வல்லோசை மிக்க ஜெருமனிலும், சிங்க முழக்கத்தையும் பறையோசையுமொத்த இலத்தீன் வடமொழி களிலும் இசை அமையக்கூடுமாயின், தமிழில் ஏன் கூடாது? ஏன் முடியாது? எனக் கேட்கிறோம். தமிழ்க்கும், இசைக்கும் தொடர்பு விட்டுப்போன காரணத்தையும், அங்ஙனம் விட்டுப்போன வரலாற்றையும் இனிக் கூறுவோம். தமிழர் வாழ்வில் இசை வேறெவ்வகுப்பினரினும் மிகுதியாகவே கலந்துள்ளது என்பதை, இன்றும் கீழ் வகுப்பினர் என்று கூறப்படும், 'உண்மைத் தமிழர்' எத்தகைய தொழிலைச்
பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/316
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை