பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்ஙனம், தமிழிசையினின்று கிளைத்த திசை இசைகள் இரண்டு. வடநாட்டில் தமிழ் நிலவும் காலத்தில் கிளைத்து, வடசொல்லை அண்டி வளர்ந்த வடபுல இசை ஒன்று. அதனின்று கிளைத்துப் பின்னும் தமிழின் வழிக் கிளைமொழியான இந்தி முதலியவற்றைச் சார்ந்து பின் பாரசீகம் முதலியவற்றுடன் கலந்த இந்துஸ்தானி இசை ஒன்று. - இவ்விரண்டினும் தெளிவாகத் தமிழ்நாட்டிலேயே வளர்ந்து, இன்றும் தமிழ்நாட்டிலேயே இடம்பெற்று நிற்கும் தமிழிசை திசைப்போர்வை போர்த்த தமிழிசைக் கிளை கருநாடக இசையாம். முன் "தமிழ்ப் பண்பு வாழ்க" என்ற பகுதியில் கூறியபடி, இந்திய இசை அனைத்தையும், யார் வளர்த்தாலும் தோற்றுவித்தவர் தமிழரேயாவர் எனக் காண்க. தமிழ்நாட்டை ஆண்ட நாயக்க மன்னர் தெலுங்கராயினும் பரந்த மனப்பான்மையுடையவர். அவருட் சிலர் தெலுங்கு இலக்கியத்தோடு தமிழ் இலக்கியத்தைக்கூடப் போற்றியவர். ஆனால், இஃது அக்பரைப் போன்று அரசியல் நயத்துக்காக வேண்டியன்றி வேறன்று. வட நாட்டில் அக்பரும் பின்னாளில், பிரம்மஞானசபை இயக்கத்தில் ஈடுபட்ட வெள்ளையரும், ஆதரவின் பேரால் இந்துக்களில் உயர்வகுப்பார்களுடைய கலைகளையும் நாகரிகத்தையும், சில உயர்ந்த நாகரிகக் குடும்பங்களையும்கூட, விலை கொடுத்து வாங்கித் தம் வயப்படுத்தியது போல், நாயக்க மன்னரும் (முகலாயரினும் நாட்டு மக்களுக்கு அண்மை யுடையவரானபடியினால் இன்னும் எளிதாகவே) தமிழர் கலை, நாகரிகம் முதலியவற்றின் உதவியால், தம் கலையையும் நாகரிகத்தையும் (வடமொழிக் கலை நாகரிகத்தையும்கூட), மேம்படுத்தலாயினர். அதன் பயனாகத், தெலுங்கு இலக் கியம் அடைந்த நன்மை எவ்வளவோ உண்டு. ஆனால், இசையைப்பற்றிய மட்டில் மொழி தெலுங்காயினும், பயில்வோர் வகையிலும் (அஃது அவரைச் சார்ந்தவர் மொழிப் பற்றைவிடப் பணப் பற்று மிக்கவர் என்பதனை மட்டுமே காட்டவல்லது) பயிலும் இடவகையிலும், அன்றேபோல் இன்றுவரை தமிழரும் தமிழ்நாடும் ஆகவேயிருந்தது. இவ்வகையில் தியாகர் உயர்ந்தது இசைக்கலையால் மட்டுமன்று, அவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தார் என்பதனாலுமேயாகும். தமிழரிடைப் பயின்ற தமிழிசையைத்