பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகையில் சுரங்கள் ஒழுங்குபடுத்தப் பட்டதாகக் குறிக்கப் பட்டிருக்கிறது.

இவ்வளவு தொலைவு சென்று தமிழிசையின் தொன்மையையும் விரிவையும் எடுத்துக்காட்ட வேண்டியதே இல்லை. சிலப்பதிகாரம் தமிழிசையின் அறிவியல் விரிவையும். கலை உயர்வையும், பழைமையும் நன்கு எடுத்துக் காட்டும். அந்நூலுக்கு உரை எழுதிய உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், நூலுக்குப் பன்னூற்றாண்டளவு பிற்பட்டு வாழ்ந்தவர். அவர் காலத்திற்கூடச் சிலப்பதிகாரத்துக்கு உதவியாயிருந்த இசையிலக்கண நூற்களும், இலக்கிய நூற்களும் இருந்தன என்று காணப்படுகிறது. சில நூல்கள் எழுதியவர் காலத்தில் இருந்து, அவர் காலத்துக்குள் இறந்துபட்டதாக உரையாசிரியர், கூறுகிறார். (எது எவ்வாறாயினும் இவ்வழிவு மட்டுமாவது கடல் கோளினாலன்று, பாராட்டின்மையாலோ பகைமையினாலோ தான் என்று காணலாம்). அவற்றுள் இசைநுணுக்கம், பஞ்ச பாரதீயம் முதலிய நூல்கள் கூறப்படுகின்றன. இவை இன்று நமக்குக் கிட்டாததால் சிலப்பதிகாரம் ஒன்றே இசைபற்றிய மிகப் பழைய நூலாக இன்று நிலவுகின்றது.

சிலப்பதிகாரத்துள்ள ஆய்ச்சியர் குரவை, கானல்வரி,வேட்டுவ வரி முதலிய பகுதிகள் ஒப்பற்ற உயர் இசை இலக்கியங்கள். இதே நூலில் இலக்கணப் பகுதிகளும் அதாவது அறிவியற் பகுதிகளும் கூறப்படுகின்றன. இசையாசிரியன் (பாகவதர்), தண்ணுமை (மத்தளம்), குழல் (புல்லாங்குழல்), யாழ் ஆகிய கருவிகளின் தலைவரியல்பு, கருவிகள் இயல்பு, வகை ஆகிய அனைத்தும் விரிவுபடக் கூறப்பட்டுள்ளன. யாழில் இன்றிருக்கும் வீணைபோல் ஏழ்நரம்புடைய சிறுகோட்டியாழ் மட்டுமன்றி, இருபத்தொரு நரம்புடைய சகோடயாழ் ஒன்றும், ஆயிர நரம்புடைய பெருங்கோட்டியாழ் ஒன்றும் கூறப்பட்டுள்ளது.இராவணன் கைலையைப் பெயர்க்க முயன்று, அதனால் நைவுற்றகாலை, இறைவன் மனம் மகிழும்படி ஆயிர நரம்புள்ள யாழ் பயின்றான் என்று கூறப்படுகிறது. அது தமிழர் பெருங்கோட்டி யாழ்தான் போலும்! இன்றைய வீணையில் ஏழு நரம்புகள் ஏழு சுரங்களை வாசிக்க உதவுகின்றன. சகோடயாழ் இருபத்தொரு நரம்புகளை யுடையதாதலின், இதனினும்