தமிழ் முழக்கம் [291 நுண்மையும் நயமும் உடையதாதல் வேண்டும். ஆயிரம் நரம்புடைய பெருங் கோட்டியாழ் இதனினும் எத்தனையோ நயமுடையதென்று கூறவேண்டுவதில்லை. இத்தகைய யாழில் இசை எழுப்பினோரது மொழியில் இசை ஏற்படாது என்று கூறுவோர் கூற்று, எத்தனை அறிவுடையது பாருங்கள்! இசை உணர்ச்சியில் பருமை நுண்மை என்ற உணர்ச்சி வேறுபாடுகள் இருக்கக்கூடும், என யாவரும் ஏற்பர். பறையோசை இசை உள்ளதாயினும், முன்னதினும் பின்னது உயர்வும் நயமும் உடையதாகுமன்றோ? இன்று கலைப்பண்பு குறைந்தவை என்று கருதப்படும் நாடோடிப் பாட்டுகளைவிடக் கருநாடக இசை உயர்ந்தது எதனால்? நுண்மையினால்தானே? அந்நுண்மையைத் துய்க்க இயலாத பரு உணர்ச்சி உடையவர், அதனைப் பார்த்து இகழின், அதன் உயர்வு அதனால் குறைவு ஆகுமா? ஆகாதே! அதுபோலவே இன்றைய கருநாடக இசையிலும் நுண்மையுடைய கலை -இசை ஒன்று இருந்து அஃது ஆதரவற்றிருக்கின்றது என்றால் நீங்கள் வியப்படையக் கூடும். ஆனால், உண்மையில் அத்தகைய இசை உளது என்று காட்டுவோம். தமிழ் மொழியையும் பிறமொழியையும் பேச்சு நடையிலோ பாட்டிலோ உரத்துப் படிப்பவர்கள், அவற்றினிடையே உள்ள வேற்றுமையை எளிதாக உணர்வர். தமிழை வாசிக்க முயற்சி மிகவும் வேண்டுவதில்லை. நரம்பு களுக்கும் நாடிகளுக்கும் உழைப்பு மிகுதி தரும் ஒலிகள் படிப்படியாக விலக்கப்பட்டு, அது பண்பட்டு விளங்குவதே இதற்குக் காரணம். இங்ஙனம் பண்பட்ட மொழிகளில் இயற்கையிலேயே ஓர் இசைப் பண்பு உண்டு என்று காணலாம். இப்பண்பினை வடமொழியிலும் ஆங்கிலத்திலும் உயர்கலைஞர்கள் கையாண்டுள்ளனர். எடுத்துக்காட்டாகத் தண்டிகாலப் புலவர் வன்சொல் விலக்கியும், சில சமயம் வல்லொலியும், நாசிகமாகிய மெல்லொலியும் விலக்கியும் பாடியுள்ளனர். அத்தகைய பாக்கள் தமிழ் போன்றே ஒலித்தல் காணலாம். அதுபோல் ஆங்கில நாட்டிலும் அயர்லாந்துக் கவிஞர், தம்மொழியியல் பொன்ற வன்சொல்லை விலக்கி எழுதுவதும், அவ்வோசையைப் பின்பற்றி எழுதிய வின்ஸ்பர்ன் என்பார் 'ஆங்கில மொழியின் குயில்' எனப்படுதலும் காண்க. கருநாடக இசையும் அவ்வப்போது பரு ஒலி நீத்து நுண்ஒலி
பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/322
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை