(வலியினும் மெலி நுண்ணியது; மெலியினும் இடையும் உயிரும் நுண்ணியன என்க.) சேர்ந்து மிகவும் உயர்நிலை எய்துதல் காண்க. தமிழின் ஒலியியலை நோக்கினால் கருநாடக இசையின் உயர்வே தமிழிசையின் தொடக்கமாம் என்னலாகும். பறையோசையும் நாடோடிப் பாட்டும் கேட்டவுடன் தரும் எழுச்சியைக் கருநாடக இசை தாராது. சற்று ஆரவாரம் தொலைத்து அடங்கிய பண்பட்ட புலனுணர்வுடையார்க்கே இன்பந்தருகின்றது அல்லவா? அதுபோல், கருநாடக இசையில் பயின்று பண்பட்டபின், அதன் உயர்நிலையைத் தமிழில் நாடினால்தான் அதன் அருமை விளங்கும் தெலுங்கில், "தல்லியு தன்றியு நீவே" என்பதனை 'அப்பனீ! அம்மைநீ அன்புடைய மாமனும் மாமியும் நீ!" என்பதுடன் ஒப்பிடுக. முன்னதில் உணர்ச்சியினும் ஒலி முந்துற நிற்பதும், பின்னதில் உணர்ச்சியினும் ஒலி பின்னுற நிற்பதும் காண்க. உயர்இசையில் இசையின் பொருளாகிய உணர்ச்சி அல்லது 'பாவம்' கனிந்து, மேம்பட நிற்றல் வேண்டும்- ஓசை அதற்குத் தாழ்ந்து, ஆனால் அதன் உயர்வு தாழ்வுகளை எடுத்துக் காட்டி நிற்றல் வேண்டும். பாடகன் நயத்தை எடுத்துக் காட்டும் பக்கமேளக்காரன் இருக்கிறானே, அவனைப்போல. இது இசையின் ஒலிப்பையும் பாவத்தையும் மட்டுமே கவனித்தால்தான் பொருந்தும். பொருளைக் கவனித்தாலோ தெலுங்கு மொழியிசை தமிழர்க்கு விளங்காத பொருளுடையது. பொருள் விளங்காததாகவே, கருத்தும் பாவமும் விளங்காது வீணாதல் காண்க. அதுமட்டுமன்று, தெலுங்கு தெரிந்தவரேதாம் அதனைக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது தெலுங்கிசையின் நிலைமை யாதெனப் பார்ப்போம். 'தல்லியு தன்றியு நீவே' என்றால், 'தாயும் தந்தையும் நீயே', என்பது பொருள். இதனினும் தமிழ்ப் பாட்டின் பொருள் நிறைவுடையதாதல் காண்க. தெலுங்குப் பாட்டுகளைச் 'சுதேசமித்திரன்' முன்னர் வாரத்துக்கு வாரம், பெருமுயற்சி செய்து மொழிபெயர்த்து உதவிய துண்டு. அதனை வாசிப்போர் அவற்றின் வெள்ளைக் கருத்துகளை - சக்கைப் பசப்புகளைக் காணலாம். தமிழிசை இசைக்கலை மட்டுமன்று, கவிதையுங்கூட
பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/323
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை