தமிழ் முழக்கம் [293 ஆகும். ஆனால், தெலுங்கு இசையின் பழக்கமும், அத் தெலுங்கிசையில் இருக்கும் கொஞ்சநஞ்ச உயிரையும் கெடுக்கக் கலந்த நச்சுக் கருவியாகிய இசைப்பெட்டியும் - ஹார்மோனியம் நம் நாடகங்களையும் பேசும் படங்களையும் தாக்கிக் கவிதை யல்லாத வெற்றுரைப் பாட்டுகளைப் - புலம்பலினும் கேடுகெட்ட வாய்ப்பாட்டு ஓலங்களை - இசையாகக் கருதச் செய்துவிட்டன. ஆனால், தமிழிசையிற் கலந்துகிடக்கும் தெய்விகக் கவிதையையும் உயர்ஓசை நயத்தையும் கீழ்வரும் பாட்டில் காண்க. "மாசில் வீணையும் மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை இணையடி நீழலே.” இதில் அகலக் கலையும் ஆழக் கலையும் உள்ளுயிர்க் கலையும் ஒருங்கு பொருந்திய அருமை காண்மின். ஓசை நயத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், வல்லெழுத்து எவ்வளவு குறைந்து மெல்லோசை இடையிட்டு இடையோசையே மேம்பட்டு நிற்கின்றது பாருங்கள். இது போன்ற தமிழிசை இலக்கியங்கள் எண்ணிறந்தன உள்ள பண்டையிசையில் மீந்தவையே சிலப்பதிகாரப் பகுதிகள். இடைக்கால இசை இலக்கியம் தேவார திருவாசகப் பகுதிகள். பிற்காலத்தில் திருப்புகழும், தனி இசையாக முத்துத்தாண்டவர் கீர்த்தனைகளும் உள்ளன. நாடக முறையில் நந்தனார் கீர்த்தனையும், இராம நாடகமும், உயர்இசை நூற்கள் ஆம். புத்தியக்க முறையில் இசைப்புலவர் திலகமாம், தி.இலக்குமணப் பிள்ளை இசையையும், கவிதையையும் தமிழ்ப் பண்பாட்டையும் கருத்துப் பண்பாட்டையும் ஒருங்கே உடைய உயர் கருத்துப் பொதிந்த பாட்டுகள் சில இயற்றியுள்ளனர். ஆனால், இவற்றிடையே தமிழிசை என்ற பெயர் வைத்துக்கொண்டு தமிழ், கலை இரண்டு மல்லாத வாய்ப்பாட்டிசையையே பாடும் நாடக இசைஞரும், பேசும்பட இசைஞரும், பிற தற்கால வாய்ப்பாட்டு இசைஞரும் போன்றவர்கள் தமிழிசைஞரே என்றெண்ணும் எண்ணம் நம் நாட்டில் ஒழிதல்வேண்டும். அவர்கள் இசை அறிந்தோர்; அவ்வளவுதான்! பாட்டின் பொருளும் யாப்பு
பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/324
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை