பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையும் அறிந்தோர் கவிஞர் ஆவாரா? அதுபோலவே இவர்கள் இசையிலக்கிய ஆசிரியர் ஆகார். அவர்கள், இசைப்பாக்கள் இலக்கியச் சுவையுடையவை ஆகா. ஆதலின், என்க. உயர்திரு. இலக்குமணப் பிள்ளையைப் போலும், கவியரசர் பாரதிதாசனைப் போலும் தமிழ்ப் பற்றும் இலக்கியப்பற்றும் கொண்ட இசைஞரே நாட்டின் புதுத் தமிழிசையியக்கத்தை நடத்தும் வண்மை யுடையார் ஆவர். இன்று, ஆதரவில்லாமல்தான் தமிழிசை தாழ்ந்து, தமிழிசையின் கிளையாகிய-உயிரற்ற சொத்தைக் கிளையாகிய, கருநாடக இசை உயர்ந்து விட்டது என்பதனைக் காட்டுவோம். இன்று உயர்த்திச் சொல்லப்படும் கருநாடக இசை தற்போது பாராட்டப்படினும், ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இதே நாட்டில் பாராட்டப்படாமலிருந்தது பலர்க்கும் நினைவிருக்கலாம். நாடகங்கள் முதலில் இசையைத் துணை கொள்ளத் தொடங்கிய காலங்களில், மக்கள் இந்துஸ்தானி மெட்டுகளையே விரும்பிக் கேட்டனர். அதற்குப் புதுமெட்டு என்ற பெயரும் சூட்டப்பட்டது. பின் இங்கிலீஷ் மெட்டுகள்கூடத் தோன்றின. இவற்றினிடையே எந்தத் தெலுங்குப் பாட்டாவது வந்தால் அதனைக் கேட்டவுடன், “யாருக்கு வேண்டும் இந்தப் பழைய கருநாடகம்" எனப்பட்டது. இந்தச் சொல் இன்னும் இசை உலகத்துக்குப் புறம்பாகப் பல பொருள்களை இழிவுபடுத்திக்கூட வழங்கி வருகிறது. நாகரிகமற்ற மனிதனை "இவனொரு கருநாடகப் பேர்வழி, ஒன்றுக்கும் உதவாத பழைய கருநாடகம்' என்கிறோம். அத்தனைக்குச் சீர்கெட்ட நிலையிலிருந்த 'கருநாடக" இசைதான் இன்று சிலர் போற்றி உயர்த்தித், தமிழரைப் பணியவைக்க வழங்கும் “தியாகர்” கீர்த்தனங்கள். 65 இப்படிக் கருநாடகம் அன்று மதிப்புக் குறைவானேன்? அப்போது அது முழுமையும் தமிழ்நாட்டுக்குப் புறம்பாகாமல் தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்தது. கருநாடகம் என்னும் சொல் 'கரியநாடு' என்று பொருள்படும். இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் இந்த வட்டங்களில் மலையை ஒட்டிய இடமும், மைசூரை ஒட்டிய சேலமும் இன்றும் பருத்தி விளையப் பதமான கரிசல்மண் நாடாயிருக்கின்றது. இதுவே கருநாடக நாடு. இதனை, ஆங்கிலேயர் வரும்போது