பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத் தெம்மாங்கு இலக்கிய ஆதரவும், இசை அறிஞராகிய இசைத் தொழிலாளர் ஆதரவும் அற்று, நலிந்து தேய்ந்த பழைய தமிழிசைக் கிளையேயாகும். கருநாடகமும் அதுவே. ஆயினும், அது தமிழ்மக்கள் வாழ்க்கையை விட்டகன்று, பிறமொழி மன்னர் பொழுதுபோக்குக்கு ஆடப்பெற்ற பொய்நடிப்பு இசையாயிற்று. தெம்மாங்கோ எனில், மக்கள் வாழ்க்கையின் உயிர்த்துடிப்புடைய தாய் இன்றும் இயங்குகின்றது. வாழ்க்கைத் தொடர்புடையதாய் எதனையும் இழிவுபடுத்தும் சிலரின் பழிப்பை ஏற்றுத் தமிழர் இதனைப் புறக்கணிப்பதுபோலவே மலையாள நாட்டிலும் தமிழர் மறந்துவிட்ட பழங்கலைகளை - இதுவரை மக்கள் போற்றிவைத்திருக்கும் கலைகளையும் கூட-இன்று அவர்கள் வெறுக்கத் தொடங்குகின்றனர். இதுகாறும் அவை காப்பாற்றப்பட்டது. மலையாள நாட்டில் வடநாட்டுப் பார்ப்பார் முற்றிலும் தலைமை பெற்றுவிடாமல் பழந்தமிழ் அந்தணராகிய நம்பூதிரிகளே தலைமையடைந்திருந்ததனால்தான் என்னல் வேண்டும். இன்னும் பழந்தமிழ்க் கலைகளை அங்கே ஆதரிப்பவர் நம்பூதிரிகளாவர். மேனாட்டார் இன்று மலையாளம் சென்று அப்பழங்கலைகளை ஊமைக் கூத்து, துள்ளல் (கலிப்பாட்டு), வஞ்சி ஆகியவற்றைக் கற்று, அவற்றின் உயர்கலை வளத்தை உலகிற்கு வெளியிடுகின்றனர். மேல் நாட்டினர் வியக்கும் இவ் உயர்கலைகள் தமிழர், மலையாளிகள் புறக்கணிப்புக்கு ஆளாவதேன்? தமிழ்நாட்டில் தமிழர் புறக்கணிக்கப்பட்டுப் பிறவகுப்பாரும் அவரைச் சார்ந்தொழுகுவாரும் உயர்ந்ததனால், அவ் உயர்ந்தோர் தம் உயர்வைக் காக்க மக்களிடையே உள்ள மக்களுக்குரிய கலை முதலிய யாவற்றையும் புறக்கணித்து ஒதுக்கி வைத்தனர்; இஃது பாரதக் கதையில் அருச்சுனன் திறங்கள் ஓங்க, ஏகலைவன் வலக்கைப் பெருவிரலைக் கல்வி ஊதியமாகக் கொண்ட துரோணரின் பெருந்தகைமையைப்போல் என்க. மக்கள் வாழ்வுடன் தெம்மாங்கு மெட்டுகள் தொடர் புடையவையாய் இருப்பதனாலேயே அவற்றைப் பொதுமக்கள்- பார்ப்பனராலும் அவர்கள் வால்பிடிக்கும் போலித் தமிழராலும் இழிகுலத்தினர் என ஏளனமாகக் கூறப்படும் உண்மைத் தமிழரான பொதுமக்கள்-அதனை எப்படியாவது, ஒளித்தாவது கேட்க விரும்புகின்றனர். உயர்குலத்தார் புறக்கணிப்பு, நகைப்பு,