பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

299

தமிழ் நாட்டில் இன்று நடக்கும் தெருக்கூத்துகளில் பல இப்படி நிகழ்வது காணலாம். சிலப்பதிகாரத்தில் ஷேக்ஸ்பியர் காலத்தைப்போலப் பின்புறத் திரை மட்டும் இருந்தது. முன் திரையும், திரைமாற்றமும் இல்லை. அதனால்தான் காட்சி முடிவைக் காட்ட ஷேக்ஸ்பியர் பாட்டுகள் (அவை எதுகையற்றவை) கணீர் என எதுகையில் முடிகின்றன சிலப்பதிகாரத்தில் காதைகள்'என' அல்லது 'என்' என்று முடிகின்றதும் இக்காரணத்தினாலேயே யாகும். இச் சொற்கள் காட்சிமாற்றத்தைக் குறிக்கும்.

மேலும், இன்றைய நாடகத்தில் நடிகர் பலர். அற்றைய கிரேக்கர் காலத்தில் நடிகர் மிகச் சிலர்; எழுதப்பட்ட நாடகங்களும் அதற்கேற்பச் சில பாத்திரங்களே வரும்படி அமைக்கப் பெற்றிருந்தன. நாடகங்களில் துயர் நாடகங்க ளென்னும் (அவலச் சுவை நாடகங்கள் வகை (Tragedies) தோற்றத்தால் முந்தியது. அவற்றுள் இரண்டு வகை நடிகர் இருந்தனர். ஒருவகைப் பாட்டு மட்டும் படிக்கும் குழாம் (கூட்டிசைக் குழாம்)-(Chorus)ஆம். இன்னொன்று பாட்டோடு செய்கையும் அபிநயமும் உடைய தலைவர் ஆவர். குழாத்தினர் பாட்டில் நயமான பகுதி வரும்போது 'ஆமாம்' போடவோ, கை தட்டிக் கொக்கரிக்கவோ செய்வர். சிலகால் தலைவன் அரசனாக நடிக்கும்போது, அவர்கள் அவனது அமைச்சர் குழாமாகவோ குடிமக்களாகவோ அமையவும் செய்வர்.

கிரேக்க நாடகத்தின் மிகப் பழைமையான காலத்தில் இம்முதல் நடிகர் கதை சொல்பவராகவும், பிறர் கேட்பவராகவும் இருந்தனர். படிப்படியாக அபிநயமும் நடிப்பும் கலந்தன. பல நடிப்புகளுக்கு முதலில் ஒருவரே நடிகரா யிருந்தனராயினும், படிப்படியாக நடிகர் தொகை அதிகப்பட்டது. கதை கூறும் பகுதிகளும், விரிவுரைகளும் விடப்பட்டன.நாடகம் தோன்றியது இவ்வகையில் தான். இத்தனை மாற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்படாத முதல் நிலை நாடகத்தில், இன்றைய நாடகத்தைப் போல, உரையாடல் மட்டுமன்றி, கதைப் பகுதி கூறலும் விரிவுரைகளும் (வருணனைகள்) எல்லாம் காவியத்தில் உள்ளதுபோல மலிந்திருந்தன. அவற்றுள் விரிவுரைகள் உரைநடையாகவும், கதைப் பகுதி செய்யுளாகவும், நாடகப்பகுதி