இதுகாறும் கூறியவற்றால், தமிழிசையின் தொன்மை விரிவு உயர்வு ஆகியவை விளங்கும். முன்னைய அதிகாரம் ஒன்றில் தமிழர் உயர் அறிவுக்கும், கலைப்பண்புக்கும் அவர்கள் மொழியே-மொழியின் சொற்களே சான்று பகரும் என்று கூறினோம். இசை வகையிலும் இது பொய்க்கவில்லை. உரைநடை, பாட்டு ஆகிய இரண்டுக்குமுள்ள வேற்றுமை என்ன என்று ஆராய்ந்தால், அவற்றுள் உரைநடையில் பேசுபவர் கருத்தை ஒட்டித் தொனி உயர்ச்சி தாழ்வு அலை ஏற்படுகிறது என்றும், பாட்டில் ஒழுங்காகவும், செவிக்கினிமை பயக்கும் அலைகள் ஏற்படுகின்றன என்றும் காணலாம். இவ்விரண்டு அலைகளும் ஒத்துவாராத பாட்டு உயிரற்ற செய்யுளாகவும், ஒத்துவரின் ஓசை நயமுடைய பாட்டாகவும் திகழும். உ பாட்டைவிட இசையில் இவ் ஒலி உயர்வு இன்னும் மிகுதி. முன் கூறிய கருத்து அலை, செய்யுள் அலை ஆகிய இரண்டினுடன், உணர்ச்சி உயர்வு தாழ்வினால் ஏற்படும் உணர்ச்சியலையாகிய மூன்றாவது அலையும் ஒன்று சேர்கின்றது. இம்மூன்றும் ஒன்றை ஒன்று தழுவி நயப்படுத்தி ஏற்படும் இசைப்பே இசை அலையாகும். ஒவ்வோர் அலையும் பிற அலையுடன் இசைந்து நயம் பெறுகின்றது. இவ்விரண்டு கருத்தையும் கொண்டே தமிழில் இசை என்ற அரிய சொல் வழங்குகிறது.பாட்டலை, பொருள் அலை, உணர்ச்சி அலை இம்மூன்றும் கூடிய இசையே இசை எனக் கொண்ட நயம் எத்தனை உயர்வுடையது! தத்துவங் கடந்த பொருளைக் கடவுள் என்ற உயர்பண்பு இதனிலும் காணப்படுகிறதன்றோ! இப் பண்பு, இன்றும் கெடாது தமிழிசை தனித் தமிழிசையாய் நிலவவேண்டுமாயின், அது தமிழியக்கம் தமிழரியக்கம், தமிழிலக்கிய இயக்கம் ஆகிய அனைத்துடனும் சேர்ந்து ஒன்றுபடுதல் வேண்டும். தமிழ்ப் பண்பற்ற பிற்றைச் சேர்ப்புகளுக்கு தமிழில் ஊறித் தமிழ்மணம் வீசா வெற்றாரவாரச் சொற்களுக்கு அல்லது நடைக்குத் துணையும் முதன்மையும் தாராது, தமிழர் குருதிச்சூட்டில் விளைந்த தனித்தமிழிசையே பயிலுதல் வேண்டும். அதுவும் தமிழரிடை வேற்றுமை காட்டாத நிலையில், தமிழரிடை ஒரு சாராரையோ, பல சாராரையோ விலக்கித் தம் நலம் பேணுபவர், அல்லது
பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/332
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை