(302) ||
அப்பாத்துரையம் - 1
பொதுநலத்துக்காகத் தம் நலத்தை விட்டுக் கொடுக்க மறுக்கும் குழுவினர் கைப்பட்டு அவர்கள் கருவியாகாமல், அது தமிழர், உண்மைத் தமிழரிடைப் பிறப்பு வேற்றுமையறப் பாடுபடும் தமிழர், அல்லது அவ்வேற்றுமை அறும்வரை மேலீடான ஒப்புமை வேதாந்தம் பேசிப் பசப்பி வலியவர் கீழ் மெலியவரைக் கிடத்திவிட்டு வைத்தல் வேண்டும் என்று
தமிழராலேயே பேணப்பெறுதல் வேண்டும்.
சை
-
முயலாத
அத்தகைய தமிழி தமிழர் என்ற அகன்ற அடித்தளத்தையும், தமிழ்ப் பண்பு என்ற உயர் கொடுமுடியையும், தமிழர் வாழ்வு என்ற அளவிட முடியா மேடு பள்ளங்களையும், இயற்கைக் காட்சிகளையும் உடைய பெரிய இசை மலையாய்த் தமிழர் நலங்களாகிய ஊற்றுகளுக்கும் தமிழர் வண்மையாகிய ஆறுகளுக்கும் பிறப்பிடமாய், தமிழன்பு என்ற கடலில் அவ்வாறுகளைச் சேர்த்துத் தமிழறிவு என்ற முகிற்குலத்தால் மீண்டும் அன்புநீர் மொண்டு பெய்யப் பெற்றுத் தமிழ்வாழ்வு வளம்பெற ஓங்குதல் வேண்டும். “அந்நாளே தமிழ் வாழ்வின் நன்னாள்; தமிழ் நாட்டினர் வாழ்வின் பொன்னாள்!” அதை அடைய நாம் உயிர்ப்புடன் முயல்வோமாக!
தமிழ் வாழ்க!
அடிக்குறிப்பு
1.
இவ்விடத்தில், கோநகர்ஆண்டுவிழாவின் போது தலைமை தாங்கிய புரட்சிக் கவிஞர் திரு. பாரதிதாசன் அவர்கள் உரை குறிப்பிடத்தக்கது. அவர்கள் கூறியதாவது:- காலஞ்சென்ற பாரதியார் தமிழிசைக்குப் பகைமையாக இரண்டு பொருள்களைக் குறிப்பிடுவார். ஒன்று ஆர்மோனியப் பெட்டி, மற்றது தியாகையர் கீர்த்தனங்கள். இவற்றுள் பின்னது கவிதைகளுக்கும் இசைக்கும் பேரிழுக்கான ஒரு குறை உடையது. செய்யுளுக்கும் இசைக்குமாகச் சொற்களை நற்புலவர்கள் சுக்குமி ளகுதிப் பிலி என்று பிரிக்கக்கூடாது. தியாகையர் தெலுங்கர் தெலுங்கிற்கும் அன்னியர் ஆதலால், பொருள் கெட்டுப் பாவம் சிதையும்படி சொற்களைப் பெய்திருக்கிறார்.