பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. முன்னுரை

1. பழமையும் புதுமையும்

உலகில் எத்தனையோ நாடுகள், சமயங்கள், மொழிகள், பண்பாடுகள்; அவற்றில் எத்தனையோ நின்று நிலவின. ஆனால் இறுதியில் அழிந்தொழிந்தன. எத்தனையோ தோன்றுகின்றன; தோன்றி நிலவுகின்றன. ஆனால் எல்லை காணாப் பழங்காலத்தி லிருந்து நின்று நிலவி, இன்றும் உயிர்ப்பு அழியாது வளர்ச்ச்சிக் கான கருவுடன் விளங்கும் ஒரு சில நாடுகளுள் தமிழகம் ஒன்று. அதனுடன் ன் ஒத்த பழமையுடைய நாடுகள், மொழிகள், நாகரிகங்கள் பல அழிந்தொழிந்து அவற்றினிடத்தில் பிற பல நாகரிகங்கள் தோன்றி மறைந்த பின்னும், தமிழும், தமிழர் நாகரிகமும் இன்றும் நிலவி, இனியும் நிலவும் நிலையில் உள்ளன.

வ் வழியாகத் தன்மையைக் கவிஞர் கன்னித் தன்மை என்று கூறிப் புகழ்வர். தமிழ்நாட்டின் மறுமலர்ச்சியைமுன்கூட்டி அறிந்து கூறிய அறிவர் ஆசிரியர் ப. சுந்தரம் பிள்ளை,

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத்துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீ ரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே”.

என்று பாடினார்.

உண்மையில் தமிழின் இக் கன்னிப் புதுமை வியப்புக்குரியதே யாகும். ஆனால் இப்புதுமை முற்றிலும் தமிழின் இயல்பில் அடங்கிவிட்டதா? அல்லது தமிழர் செயலால், தமிழர் டைவிடா முயற்சியால் ஏற்பட்டதா?