அப்பாத்துரைகொண்டே ஆயிரம்நூல் செய்க
எப்பாத் துறைக்கும் இவனோர் பழம்புலவன் அப்பாத் துரையறிஞன் ஆழ்ந்தகன்ற - முப்பால்போல் நூலறிவு! நூறு புலவர்கள் சேரினிவன்
காலறிவு காணார் கனிந்து.
ஆங்கிலத்தை அண்டை மொழிகளினைப், பண்டைநாள் பாங்குற வாழ்ந்த பலமொழியை - ஈங்கிவனே
செந்தமிழ்க்குச் சேர்க்கும் குருதியெனச் சேர்க்கின்றான் சிந்தனையில் யாவும் செரித்து.
விருந்தெனும் நூலை வெளிநாட் டமிழ்தை
அருந்தெனத் தந்தான் அருந்திச் - செருக்குற்றேன் எத்தனை எத்தனை எண்ணித் தொகுத்தீந்தான் அத்தனையும் முத்தமிழர்க்குச் சொத்து!
சின்னஞ் சிறுவர்முதல் சிந்தனையில் தோய்ந்தாயும் பென்னம் பெரியர்வர்க்கும் பித்தாக்கும் - வண்ணம் அருநூல்கள் ஈவான் கலைக்களஞ்சி யம்போல் வருநூலைப் பாத்துவப்பேன் நான்!
ஆங்கிலத்தில் என்பாட்டை ஆரும் வியக்குவணம் பாங்குறச் செய்தான் படித்தவர் பாராட்டி
வைய இலக்கியத்தில் வாழும்என் பேரென்றார் ஐயமில்லை அப்பாத் துரை!
குறள்வெண்பா
அப்பாத் துரைகொண்டே ஆயிரம்நூல் செய்க
தப்பா துயரும் தமிழ்!
- பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர். GLO GÖTED GOT - 600 017.
தொலைபேசி : 044-24339030 செல்பேசி
- 9444410654
அப்பாத்துரையம் 1