இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வருங்காலத் தமிழகம்
5
தமிழ் வளர்க்கும் அழியாக் கலை படைத்த கலைஞராவோம். தமிழுக்கு ஏற்பட்டுள்ள இழிவுகளைப் போக்க வேண்டுமாயின் முன்னோர் வழிப் பிறந்தோம் என்று மனநிறைவு பெற்றுவிடாமல், முன்னோர் வழி நின்று முன்னோர் வழியில் செயலாற்றுவோம் என்ற உறுதி ஏற்பட வேண்டும். தமிழ் வளர்ப்பில் முன்னோர் கொண்ட கோட் பாட்டை, அவர்கள் கண்ட கன்னித் தன்மையின் மறைத் திறவுகோலை நாமும் காணுதல் வேண்டும்.
தமிழை அறியாக் கன்னித் தமிழாகக் கண்ட பழந் தமிழன் கலைத்திறத்திற்குக் காரணமாயிருந்த புதுமை ஒன்று உண்டு.அதுவே வாழ்க்கையில் அவன் படித்த பாடம். அது யாதென ஆராய்வோம்.