பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. பின் நோக்கும் முன் நோக்கும்

அறிவு மனிதருக்கெல்லாம் பொதுவான ஒரு பண்பே. ஆனால் அதில் மூன்று படிகளைக் காணலாம். அதன் முதல் நிலை விலங்கு நிலை; இந் நிலையில் மனிதன் விலங்கைப்போல் கண்ட பொருளைக் காட்சியாகக் கொள்கிறான்; செயலாற்றி விடுகிறான். அவனுக்கு நினைவுண்டு, நினைவாற்றல் இல்லை. அவன் நோக்கு நிகழ்காலம் ஒன்றையே நோக்கும். ஆட்டு வரிசையில் ஆடுகள் ஒவ்வொன்றாய்ச் சென்று குழியில் விழுவதைக் கண்டும் மற்ற ஆடுகள் தம் போக்கை மாற்றுவது

ல்லை. அவை தம் நிகழ்காலக் காட்சியை இறந்தகால அறிவாக, வருங்கால வழிகாட்டியாகக் கொள்வதில்லை. இந் நிலையில் உலகில் மக்களில் பெரும்பாலோர் இன்றும் உள்ளனர் என்பது வியப்புக்கு இடமல்லவா? ஆம்! ஆனால் உண்மையில் நாகரிகமிக்க இருபதாம் நூற்றாண்டிலும், நாகரிகமிக்க மேல் நாட்டிலும்கூட நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டுப் பேர் நிலை இதுதான். அவர்கள் நேரில் கண்டதைக் காட்சியாகக்கொண்டு, பசித்தவுடன் உண்டு, அகப்பட்ட கருவிகளைக் கையாண்டு, முன்னோர் வாழ்ந்த வழியில் வாழ்வதில் மனநிறைவும் இறுமாப்பும் பெற்றுவிடுகின்றனர். கேள்வி கேட்கும் குணம், முன்பின் பார்க்கும் குணம் நாம் நினைக்கும் அளவு மனிதன் இயல்பல்ல. அது இடர்ப்பட்ட மனிதனுக்கு- சிந்தனையில் சறுக்கிய மனிதனுக்கு மட்டுமே இயல்பாகும். பெரும்பாலோர் சிந்தனையுமற்றவர், வாழ்க்கைக் குறிக்கோளும் அற்றவர். அவர்களைப் பற்றியே அறிஞர், “வாழ்வதற்காக உண்பவர் அல்லர்; உண்பதற்காக வாழ்பவர்” என்று கூறுகின்றனர்.

வாழ்க்கையில் அடுத்தபடியில் உள்ளவர் நிகழ்கால நோக்கி லிருந்து சற்றுப் பார்வையைத் திரும்பி இறந்த காலத்தை நோக்கு பவர். இவர்களுக்குக் கண்ட உண்மை பெரிது, காணாத உண்மை