பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அப்பாத்துரையம் 1

சென்று இடர்ப்படுகின்றன. தமிழன் இவ் வழித் துறந்து புதுவழி கண்டால் தமிழ்நாடு மட்டுமன்றிக் கீழ் நாடுகள் அனைத்திற்குமே அவன் வழிகாட்டியாவான்.

தமிழனுக்கு, அதிலும் சங்ககாலத் தமிழனுக்குச் சிறப்பான தமிழ் நெறி, தமிழ் நோக்கு ஒன்று உண்டானால் அது எதிர்கால நோக்கே. பிற்காலத் தமிழன் தமிழைப் பழந்தமிழ் என்று போற்றினான். முற்காலத் தமிழன் அதைப் புதுத் தமிழ், தமிழ்ப் புது நறவு என்று போற்றினான். பிற்காலத் தமிழன் செத்த கதையைச் செத்த உருவில் காப்பிய நடைப்படுத்தி மகிழ்ந்தான். பழந்தமிழன் உயிருள்ள பொருள்களை உயிருள்ள நாடக கூறினான். பிற்காலத் தமிழன் மெய்யில் பொய்மைகண்டு மகிழ்ந்தான். முற்காலத் தமிழன் பொய்யிலும் மறைந்த நின்ற மெய்ம்மையே கண்டான். சங்க காலத்திலும் பழமை உண்டு என எடுத்துக் கூறுபவர் இதனைக் கவனித்தல் வேண்டும். சிலப்பதிகாரத்தில் இராமன் வீரம், கண்ணன் காதல் கூறப்படுவது உண்டு. கடவுள் பற்று உண்டு. புராணக் கதைக் குறிப்புகள் உண்டு. ஆனால் அவற்றைப் புலவன் கூற்றுடன் சேர்த்துப் பார்த்தால், அவை அவன் அறிவின் படைப்பேயன்றி அவன் அவற்றின் படைப்பாய்விடவில்லை என்று காணலாம். பழங்கவிஞர் வீரத்திற்கு இராமனை எடுத்துக்காட்டாகக் கூறினர். பிற்காலக் கவிஞர் இராமனுக்கு வீரத்தை எடுத்துக் காட்டாக்கி விட்டனர்! அதாவது வீரம் என்ற கருத்தைப் புறக்கணித்து, எடுத்துக்காட்டாகிய இராமனுக்குள் அதை அடக்கினர்!