பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்

சங்க கால இலக்கியத்தில் தமிழன் எதிர் கால நோக்கைக் காணலாம். ஆனால் பிற்காலத்தில் இறந்தகால நோக்கு படிப் படியாய் அவனை அடைவதைச் சங்க காலத்திலிருந்து இன்று வரை காணலாம். சங்க காலத்தவர் பாடியது பெரும்பாலும் தாம் கண்ட காட்சி, தாம் எண்ணிய எண்ணம் ஆகியவையே. இரண்டு நூல்களில் ஒரே கருத்து இருந்தால் அது ஒரே சூழ்நிலையையும் ஒரே பொது எண்ணத்தையும் குறிக்குமேயன்றி ஒரே படப் பிடிப்பைக் குறிக்காது.

சோழப் பேரரசர் காலத்தில் தாம் கண்ட உலகை, தம் காலத்தைப் பற்றிப் பாடியவர் ஒட்டக்கூத்தர் ஒருவரே என்னலாம். அந் நாளைய இலக்கியக் காட்டில் மெய்யுலகின் படமாக நிலவுவது அவரது ‘மூவருலா’ ஒன்றே. மற்றவர்கள், சொன்னதைச் சொல்லிச் சித்திரக் கவியும் மொழிபெயர்ப்பும் பயின்றனரேயன்றி வேறன்று. அம் மொழி பெயர்ப்புகளும்கூடப் புத்தறிவு காளுத்தும் தற்கால மொழி பெயர்ப்பு போன்றவையல்ல. பழமைப் பித்தேற்றும் வக்கரித்த போக்கே கொண்டவை.

இலக்கியத்தில் கண்ட இப் போக்கை மொழியிலும், அறிவி யலிலும், கலையிலும், வாழ்க்கையிலும் இன்றுகாறும் காணலாம். சங்க காலத் தமிழ் நூல் எதனை எடுத்தாலும் இடைக்கால, தற்கால நூல்களில் காண முடியாத ஓர் அரிய பண்பினை அதில் காணலாம். சங்க நூலின் தமிழ் உயிருள்ள தமிழ். அதாவது அதில் சொற்கள் பொருளைக் குறிக்கவே எழுந்தன. கவிஞன், இளங்கோவைப் போல் பாரவிரிவுரை ஆற்றலாம்; சொற்களை இழுமெனத் தொடுத்துப் பரிபாடலாசிரியர்களைப் போல் இசை