12
||---
அப்பாத்துரையம் - 1
பாடலாம்; வள்ளுவர் போல் அறிவுத்துறை நுணுக்கம் கூறலாம்; ஆனால் பொருள் குறிக்கச் சொல்! ட நிரப்பவோ ஒலி நிரப்பவோ சொல் காணுதல் அரிது.
சிந்தாமணி காலமுதல் தற்காலம் வரை இந்நிலை உண்டா என்று துருவிப் பாருங்கள். கொக்கு, ‘விண் கண்ட கொக்கு' ஆகும். பாடல், ‘பண்பட்ட பாடல்' ஆகும். இச் சொற்கள் எதற்காக? எதுகைக்காக, போகட்டும்! இது, பாட்டுக் கட்டும் முயற்சியில்! மொழியில், பேச்சில்- இது ஏன்? வள்ளி அழகியவள் என்பது செந்தமிழ். அதாவது பழைய தமிழ். வள்ளி அழகுடையவள், வள்ளி அழகானவள், வள்ளி அழகானவள் ஆவாள், வள்ளி அழகான வளாயிருக்கிறாள்- இத்தகைய தொடர்கள் இக் காலத் தொடர்கள். இவற்றில் அழகான என்ற சொல்லிருக்கிறதே, அதில் ஓர் அரிய ‘அழகு-அழகு உடைய பொருளை இன்றைய தமிழன் ‘அழகு ஆன' பொருள் ஆக்கி விட்டான். இவ் வகையில் வேண்டுமானால் அவனுக்கு ஒரு ஆறுதல் கூறலாம். இவ் வருவருப்பான தொடரின் பகர்ப்பையே அவனுடன் பிற திராவிடத் தோழரும்- ஏன் வட இந்திய, வட மொழித் தோழர்கூட பின்பற்றியுள்ளனர்! பழந்தமிழன் 'இயற்கைப் பொருளை இற்றெனத் கிளத்தல்- செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்' என்ற தொல்காப்பியச் சூத்திரங்களின் வழிநின்று, 'இது நன்று’, ‘அது எனக்கு உரியது ஆகும்' எனக் கூறினான். நாம் ‘இது நல்லது ஆகும்' என இயற்றைப் பண்பு களையும் ‘ஆவ'தாகக் கூறுகிறோம்.
-
செந்தமிழ் வேறெம் மொழியையும் வட மொழியையும் விட எளிமையும் சுருக்கமும் விளக்கமும் உடையது என்பதை, பல மொழியையும் பல நாடும் பல பண்புகளும் கண்ட அறிஞர் சர். சி.பி. இராமசாமி அவர்களே ஒப்பிப் புகழ்ந்துள்ளனர். அத்தகைய தமிழை விடுத்துத் தமிழனும், பிற திராவிடத் தோழனும் பயனற்ற 'சங்கிலித் தொடர்ப் போக்கு' நடையைப் பேணியது முன்னேற்ற மாகுமா என்பதை இன்றைய இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
பழந் தமிழன் இன்றைய தமிழனைவிட பெரிய சமயப் பூசலிடையே வாழ்ந்தான். இன்றைய வழிபாட்டு முறைகள், கொள்கைகள், நம்பிக்கைகள், கிட்டத்தட்ட அனைத்துமே