பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16.

அப்பாத்துரையம் 1

பயன்படுத்தினர். இதனாலேயே வேறெந் நாட்டிலும் காணாத அளவு சங்கத் தமிழ்ப் புலவரிடையே பல்வேறு வகுப்பினரையும், தொழிலினரையும், பெண்பாலரையும் காண்கிறோம். தமிழில் காணப்படும் அளவு இன்றைய மேல் நாடுகளில்கூடப் பெண்பாலர் பெரும் புலவராயிருப்பதைக் காண்கிறோமில்லை. ஆனால் பிற்காலத்தில் கல்வி பெண்பாலர்க்குரியதன்று என்றாய் விட்டது. பெரிய புராண காலத்திலும் பெண்கள் சமயத்துறைத் தலைவராய் கல்விக்கு ஓரளவேனும் உரியராயிருந்தனர். ஆனால் வடமொழித் தோய்ப்பு கம்பராமாயண முதல் காணப்படுகிறது. சீதை முதலிய பெண்பாலர் சிறப்புக்களில் உடலழகு நாற்குண அழகு உண்டு; கல்வியழகு கிடையாது.பெரிய புராணம் சிவநெறி நூலாயினும் அதனைப் பின்பற்றும் சிவநெறியாளர், இன்றும் தம்மிடையே திலகவதியாரும் புனிதவதியாரும் பிறந்துவிடக் கூடாது என்று தவமிருக்கின்றனர் என்று கூறுதல் தகும்! திருமால் நெறியினரும் இன்று ஒரு நாச்சியார் பிறந்தால், அதாவது கவிபாடும் பெண் பிறந்தால் என் செய்வர் என்பதை நினைக்கவே தாளவில்லை!

சிலப்பதிகாரத்தில் கண்ட முத்தமிழ் பிற்காலத்தில் பெய ரளவில் மிகவும் போற்றப்பட்டுத்தான் வந்தது. ஆனால் ஒரு தமிழையன்றி மற்ற இரண்டு தமிழும் விலக்கப்பட்டு விட்டன.

தொல்காப்பிய கால இலக்கணம், தொல்காப்பியர் காலத்தில் இருந்த தமிழின் இலக்கணம். அதனைப் பயின்றால் அவர்காலத் தமிழ், அவர் தமிழ் என்று கருதிய மொழி எது என்று காணல் கூடும். ஆனால் பிற்கால இலக்கணங்கள் தொல்காப்பியம் போல் தமிழுக்காக எழுந்த இலக்கணங்கள் அல்ல, தொல்காப்பியத்தின் ஆவி வடிப்பு மட்டுமே. ஏதாவது புதுமை புகுத்தப்பட்டால், அது தமிழ் மொழியின் புதுமையன்று, தமிழர் கருத்துமன்று; பிற மொழியினின்று தமிழ்மீது சுமத்தப்பட்ட போலிச் சரக்குகள், அதுவும் தமிழரல்லாதார் புனைந்த சரக்குகள். இலக்கியமோ பெரும்பாலும் இம்மாய இலக்கணங்களுக்கான எடுத்துக்காட்டுகள்.

சிலப்பதிகார, புறநானூற்றுக் காலத் தமிழன், அவ்வந் நிலத்திற்கேற்ற உணவு, உடை கொண்டு வாழ்ந்தான். ஆனால் நகரங்களில் வகை வகையான உணவுகள், உடைகள்! வாணிகம்