பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18 ||

அப்பாத்துரையம் - 1

நோக்க அனைத்துமே இழிந்த மொழிகளே! அத்தெய்வ மொழியின் திராவிடச் சிதைவுகளான பாகதம் பாளிகள்கூட இழிந்தவையே - வடமொழி நாடகங்களில் பணிமக்களும் (சூத்திரர் அல்லது தாசர்களும்) அவர்களுடனொத்தவரான பெண்பாலரும் வழங்குவதற்கே அவை உரிமையுடையவை.

தமிழ்நாடும், பிற திராவிட நாடுகளும், பிற இந்திய மொழி களும் கூட உண்மை நாட்டுப் பற்றுக்கு உறுதுணையாக வேண்டு மானால் திராவிடக் கலப்பற்ற ஆரியமாகத் (தவறாக)க் கொள்ளப் படும் வடமொழியைவிட, ஆரியக் கலப்பற்ற தமிழுக்கு உயர் மதிப்புத் தரவேண்டும் என்பது தேற்றம்.