பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. தமிழும் தமிழரும்

ஒரு நாடு உலகை நோக்க அல்லது பிற நாடுகளைப் பார்க்கப் பெரிதாகவோ சிறிதாகவோ இருத்தல் கூடும். ஆனால் எந்த நாடும் அந்த நாட்டு மக்களுக்கு மிகச் சிறிதாகத் தோற்றும் அளவுக்குச் சிறுமையுடையதாகாது! உலகில் மிகச் சின்னஞ்சிறிய நாட்டிலும் அந்நாட்டின் மக்கள் தம் நாட்டைப் பொன்னெனப் போற்றாதிரர்.மொழியின் நிலையும் இதுவே. ஆனால் இந்தியப் பெருநிலப் பரப்பில் எங்கும் வாழ்ந்த தமிழ் மக்கள்- தம் மொழி, தம் இனம், தம் நாடு ஆகியவற்றின் பெயரைக்கூட ஏற்க நாணமடைந்து வந்திருக்கின்றனர். தமிழகத்திலும் உயர்வகுப்பார் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் பலர், தாம் தமிழர் அல்லர் ஆரியர் என்று கூறிக் கொள்ளவும், தம் பெயரைப் பிற மொழிகளில் கொண்டும் பிற நாட்டு மக்கள் ஒலிமுறை, சொற்கள், மொழிகள் ஆகியவை பேணியும், தமக்கு மேம்பாடு தேடுவாராயினர். அறிவூழியாகிய இவ்வூழியில் தம்மின மறுத்த பிற மொழியாளர்கூடத் தம் மொழியைப் பேணி மட்டும், அந்தோ, பிற மொழி பேசுதலும் எழுதுதலும் உயர்வென்று கொண்டு வயிற்றுக்காகத் தன் மதிப்பை விற்கும்

நிலையிலிருக்கிறார்களே!

தமிழைப் புறக்கணிக்கும் இக்குறை ஒருபுறமிருக்க, வெறும் புகழ்ச்சியும் வீம்புமே உரைத்துச் செயலில் தமிழைப் பேணாத ன்னொரு கூட்டம் உண்டு. அவர்கள் பழமை பேணும் முறையில் தமிழில் எல்லாம் உண்டு, தமிழர் இனி முன்னேற வேண்டுவதில்லை என்ற கூறிக் கிணற்றுத் தவளைகளாய் காலம் போக்குவர். பொன் குடமேயாயினும் மாசற நீராட்டாவிடில் அழுக்கடைந்து ஒளி குன்றுமன்றோ? தமிழில் இயற்கை வளம் எவ்வளவு இருந்தாலும் முயற்சியும் வளர்ச்சியும் இல்லாவிட்டால் அது மங்கவே செய்யு மன்றோ? அத்தகைய நிலையை இன்று