20
அப்பாத்துரையம் - 1
தமிழ் கண்டுவிட்டது! சொல்வளமிக்க தமிழில் கலைச் சொற்கள் இல்லை என்ற குறை கூறப்பட்டு விட்டது. அறிவியல் துறைகளின் முற்போக்கில் தமிழ் பின்னடைந்து விட்டது. தாய் என்பதற்காக அன்பு காட்டலாம்; பாராட்டலாம். ஆனால் தாய் உடலுக்கு நோய் வந்தால் நோய் எம் தாயை யணுகாது என்று வாளாயிருத்தல் தகுமோ? குறையைக் குறையெனக் கூறி இடித்துரைக்க வேண்டுவதில்லை யாயினும், குறையென அறிந்து தீர்க்காவிடில் மக்கள் கடமை செய்தவ ராவரோ? ஆதலின் தமிழ்ப்பற்றும் அறிவும் கடமைப் பொறுப்பும் மிக்க தமிழ் இளைஞர், தமிழின் வளமும் குறையும் ஒப்ப அறிந்து அதனை வளர்த்தல் வேண்டும்.
“மெய்யுடை யொருவன் சொல மாட்டாமையால் பொய் போலும்மே பொய் போலும்மே”
என்றும்,
“பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே மெய் போலும்மே”
என்றும் அதிவீரராமபாண்டியர் கூறுவதற்கிணங்க, வளமாகத் தோன்றுபவை குறையாகவும், குறையாகத் தோன்றுபவை வள மாகவும் இருத்தல் கூடும். ஆகவே தமிழின் உள்ளார்ந்த வளங்கள் யாவை, அதனை நலிவிக்கும் உள்ளார்ந்த குறைகள் எவையென ஆய்ந்தறிதல் இன்றியமையாதது.
தமிழ், தமிழகம், தமிழ்ப்பண்பு ஆகியவைபற்றி இன்று பழிப்பவர் மட்டுமேயன்றி புகழ்பவர்கள்கூட அதன் உள்ளார்ந்த மதிப்பையும் வளத்தையும் நன்கு உணர்வதில்லை! உலக மக்கள் நோக்கில், தமிழ் இன்னும் சிறுமைப்பட்டே காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவர்கள் தமிழின் இன்றைய நிலையையும் தமிழர் இன்றைய நிலையையும் கொண்டு
அதனை
மேற்போக்காக மதித்து விடுகின்றனர். இன்று ன்று உலகில் பெரும்பாலாகப் பேசப்படும் மொழிகள் ஆங்கிலம், சீனம், இந்தி, வங்கம் முதலியவை. தமிழ் பேசுவோர் தொகை இவற்றினும் மிகக் குறைவு. பேசப்படும் இடமும் மிகக் குறுகிய இடம். எனவே, இந் நிலையிலுள்ள பல மொழிகளுடன் வைத்தே தமிழ் எண்ணப்