பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தமிழகம்

21

படுகிறது. வழங்கா மொழியாகிய வடமொழி இம்முறையில் எண்ணப்படுவதில்லை! வரலாற்று முறையிலும் இலக்கியப் பண்பாட்டு முறையிலும் அதன் உயர்வு உணரப்படுவது இதற்குரிய காரணம். தமிழுக்கும் இத்தகைய உயர்பண்பாடு உண்டென்பதை, இன்றைய தமிழர் நிலையும் தமிழர் புறக்கணிப்பும்- திரையிட்டு மறைக்கின்றது. ஒருவேளை தமிழும் வடமொழி போல் வழங்காதிருப்பின் இவ் வுள்ளார்ந்த பண்புகள் மதிப்புப் பெறக்கூடும் என்றுகூடக் கூறலாம். ஆகவே, காய்தலுவத்தலின்றித் தம் மொழியில் கருதத் தூண்டும் தமிழ் இளைஞர்க்கும் பிறநாட்டு நல்லார்க்கும் தமிழின் வளம், தனிச் சிறப்புக்கள் ஆகியவைகளை அறிவியல் வரலாற்று முறைகளில் பிறழாது எடுத்துக்கூறுவது பயனுடையதாகும். அம் முறையில் தமிழகம், தமிழ் ஆகியவற்றின் சிறப்புக்களை முதலில் எடுத்துக் கூறுவோம்.