பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. தமிழகத்தின் இன்றைய பண்டைய பரப்புகள்

தமிழகம் என்ற பெயர் இந்திய பெருநிலப் பரப்பில் தமிழ் வழங்கும் தனிப்பகுதிக்குச் சிறப்பாக வழங்கப்படுகிறது. இப் பகுதியின் இன்றைய எல்லை, பெரும்பாலும் எழுநூறு ஆண்டு களுக்கு முன் இயற்றப்பட்ட தமிழ் இலக்கண நூலான குறிக்கப்பட்ட எல்லையை ஒத்ததேயாகும். நன்னூலில் தமிழகத்தின் எல்லை “குணகடல் குமரி குடகம் வேங்கடம்” என்று கூறப்பட்டது. அதாவது கிழக்கே கீழ்க்கடல் அல்லது வங்கக் குடாக் கடல்; தெற்கே குமரி அல்லது கன்னியாகுமரி முனை! மேற்கே குடகம் அதாவது மேற்குமலை அல்லது மேற்குத் தொடர்ச்சி மலை; வடக்கே வேங்கடம் என்னும் திருப்பதி மலை ஆகியவற்றின் இடையிலுள்ள நாடு தமிழகம்.

தற்கால அரசியல் பிரிவுகளின்படி தமிழகப் பகுதி, சென்னை மாவட்டத்தின் இருபத்தாறு வட்டங்களுள் ஏறக்குறைய பதினொரு முழுவட்டங்களையும், தென்னிந்திய தனி அரசுகளில் (சமஸ்தானங்களில்) முழுத்தனியாக ஒன்றையும் உட்கொண்டது. வட்டங்கள் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை (பாண்டி மண்டலம்), சேலம், கோயம்புத்தூர் (கொங்கு மண்டலம்),சென்னை, செங்கற்பட்டு, வட ஆர்க்காடு (தொண்டை மண்டலம்) ஆகியவை. தமிழ்த் தனியரசு புதுக்கோட்டை. இவ்வெல்லைக்கப்பால், திருவிதாங்கூர்த் தனியரசின் பரப்பில் கிட்டத்தட்ட ஒரு பாதியிலும் (மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு), சிறுபான்மையாக நீலகிரி வட்டத்திலும், நெல்லூர் வட்டத்திலும் தமிழ் பேசப்படுகிறது.

இந்திய பெருநிலப் பரப்புக்கு வெளியேயும் தமிழ் பேசப்படும் இடங்கள் உண்டு. இவற்றுள் பழமையும் தலைமையும்