பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தமிழகம்

23

உடைய பகுதி யாழ்ப்பாணத்தை உள்ளடக்கிய வட இலங்கைப் பகுதியே. நில இயல் முறைப்படி, இது இந்தியப் பரப்பிலிருந்து து துண்டுபட்டுக் கிடந்தாலும், பண்பாட்டு முறைப்படிப் பார்த்தால் து உ உண்மையில் தமிழகத்தின் ஒரு பகுதியே ஆகும். இங்குள்ளோர் இந்தியாவினின்று குடியேறியவர் என்று அடிக்கடிக் கூறப்படுவ துண்டு; இது தவறு. பல காலங்களில் தொழில் காரணமாகவும், ஆட்சிநிலை காரணமாகவும் மற்றத் தமிழகத்தார் இப்பகுதியில் குடியேறியது உண்மையே ஆயினும், அந் நாட்டு மக்கள் தொன்று தொட்டே தமிழர் ஆதலால் அக் குடியேற்றம், தமிழகத்தின் ஒரு பகுதியிலுள்ளார் இன்னொரு பகுதியில் குடியேறுவது போன்றதேயன்றி வேறன்று. எனவே, நிற இயலை விடுத்துப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் விரிந்த எல்லையைக் கூறுவதானால், வட இலங்கையும் அதனுட் சேர வேண்டுவதேயாகும். ஆயினும், தமிழகம் எனும் பெயர் இந்தியப் பரப்பின் தமிழ் நிலத்திற்கே பெரிதும் வழங்கப் பெறுவதால், இரண்டும் சேர்ந்த பகுதியைப் பெருந்தமிழகம் என்று கூறுதல் பொருத்தமாகும். இப்பெருந் தமிழகத்திலேயே திருவாங்கூரின் உள்மண்டிலங்களில்- திருவனந்தபுரம் மண்டிலத்தின் தென்பகுதியாகிய தோவாளை, அகத்தீசுரம், இரணியல், கற்குளம், விளவங்கோடு ஆகிய ஐந்து கூற்றங்களும்; கிழக்கில் செங்கோட்டைக் கூற்றமும், வடகிழக்கில் தேவிகுளம் மண்டிலத்தைச் சேர்ந்த தேவிகுளம், பீர்மேட்டுக் கூற்றங்களும் சேர்க்கப்பட வேண்டியவையாகும்.

இவற்றையன்றி, அரசியல் காரணமாகவும், வரலாற்றுக் கால உறவுகள் காரணமாகவும், பிழைப்புக் காரணமாகவும் கடல் கடந்த நாடுகள் பலவற்றில் தமிழர் பெரும்பான்மையினராகவும், சிறுபான்மையினராகவும் சென்று தங்கித் தமிழ் பேணி வருகின்றனர். இவற்றுள் பர்மா, மலாய், சிங்கப்பூர் (கிழக்கு ஆசியா); தென் ஆப்பிரிக்கா, கிழக்காப்பிரிக்கா, மோரீஸ் தீவு (ஆப்பிரிக்கா); பிரிட்டிஷ் கயானா, மேற்கிந்திய தீவுகளான ஜமைக்கா போன்றவை (அமெரிக்கா), பசிபிக் தீவுகள் முதலிய பகுதிகள்- விதந்தோதத் தக்கவை. இவையனைத்தையும் சேர்த்துக் கடல் கடந்த தமிழகம் என்றும்; பெருந்தமிழகத்துடன் சேர அனைத்தையும் ஒருங்கே மாபெருந்தமிழகம் அல்லது தமிழ் உலகம் என்றும் கூறலாம்.