தமிழகத்தில் தமிழர் எண்ணிக்கை, கிட்டத்தட்ட இரண் டரைக் கோடி, திருவாங்கூர்த் தனியரசில் ஏறக்குறைய இருபது இலக்கமும் (20, 00, 000), வட இலங்கையில் இருபது இலக்கமும் (20, 00, 000), கடல் கடந்த நாடுகளில் மொத்தமாக அறுபது இலக்கமும் (60, 00, 000) ஆக மாபெருந் தமிழகம் அல்லது தமிழ் உலகில் தமிழ் பேசுவோர் மொத்தத்தொகை மூன்றரைக் கோடி (3,50,00,000) ஆகும்.
ய
பழந்தமிழகம் இன்றைய தமிழகத்தினும் விரிவுடைய தாயிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இன்றைய தமிழ் நாட்டின் நாலு மண்டிலங்களாகிய பாண்டிமண்டிலம், சோழ மண்டிலம், தொண்டைமண்டிலம், கொங்கு மண்டிலம் ஆகிய வற்றுள், தொண்டை மண்டிலமும் பிற மண்டிலங்களுடன் அவ்வக் காலங்களில் ஆட்சி வகையில் ஒன்றுபட்ட உட் பகுதியேயாகும். மற்ற இரண்டு மண்டிலங்களே தொன்று தொட்டுத் தனி மண்டிலங் களாகத் தனி யரசாட்சியுடை யவையாய் இருந்தன. ஆனால் இவற்றுடன் ஒப்ப மூன்றாவதாகக் கருதப்பட்ட அரசே சேர அரசு; அது இன்றைய மலையாள நாட்டைக் குறிப்பது. இதிலிருந்து இன்று தமிழகத்துக்குப் புறம்பாகக் கருதப்படும் மலையாள நாட்டுப் பகுதி, வரலாற்றுக் காலத்திலேயே (1000 ஆண்டுகட்கு முன் வரை) தமிழ் நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த பகுதிகளுள் ஒன்றாகக் கருதப்பட்டு வந்ததென்பது தெளிவு. இன்று மலையாள நாட்டுப் பகுதியில் ஆளும் கொச்சி அரசர் தம்மைப் பழந்தமிழ் சேர அரசனின் வழித்தோன்றல் என்றே கொள்கின்றார். திருவாங்கூர் அரசர்கூடச் சங்ககாலத்தின் கடை எழு வள்ளல்களுள் ஒருவனான ஆய் அண்டிரன் வழிவந்தவரெனவே, அண்மையில் பல ஆராய்ச்சி யாளர் நிறுவுகின்றனர்'. இவை மட்டுமின்றித் தமிழின் மிகச்சிறந்த இலக்கியக் களஞ்சியமான சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் சேரப் பேரரசன் செங்குட்டுவன் இளவலேயாவர். அந்நூலில் செங்குட்டுவன் தமிழரசன் என்பது மட்டுமன்று, அவன் தமிழரைப் புறக்கணித்துப் பேசிய வட அரசரை அடக்கி வட நாட்டில் தமிழ்ப் பெருமையை நாட்டியவனென்றும் கூறப்படுகிறது.போக பதிற்றுப் பத்து என்ற நூல் முழுவதுமே சேர அரசரைப் பாடுவது. எனவே 1000 ஆண்டுகட்கு முந்திய பழந்தமிழகம் மலையாள நாட்டையும்