8. கடல்கொண்ட தமிழகப் பகுதி அல்லது குமரிக்கண்டம்
மேலும் சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்திலும் தமிழ் நாட்டின் எல்லையைக் குறிப்பிடும்போது, தென் எல்லையாகக் கூறப்படும் குமரியை உரையாசிரியர்கள் குமரிமுனை என்று கொள்ளாமல் குமரி ஆறு எனக் கொண்டனர். சிலப்பதிகார நூலிலும் பிற இடங்களில் வரும் செய்திகளால் குமரி என்பது ஒரு மலைக்கும் ஒரு ஆற்றுக்கும் அவற்றைச் சார்ந்த நாட்டுக்கும் பெயர்களாம் என்று அறிகிறோம். இவற்றாலும் பிற நூற் குறிப்பு களாலும் இன்றைய குமரி முனைக்கு நெடுந்தொலைவரை நிலம் பரந்திருந்ததென்றும், முதலிய மலைகளும் குமரியாறு, பஃறுளியாறு முதலிய ஆறுகளும்; குமரிநாடு, முன் பாலைநாடு, பின் பாலைநாடு முதலிய நாடுகளும் இருந்தன என்று கேள்வியுறுகிறோம்!
க் கூற்றுக்களை வெறும் கற்பனைக் கூற்றுக்கள் என்று சிலரும், மிகைப்பட்ட கூற்றுக்கள் என்று சிலரும் தட்டிக்கழிக்கப் பார்க்கின்றனர். ஆனால் பழைய நூல்களின் குறிப்புக்கள் பல்வேறிடத்தும் ஒருமுகப்பட்டு இதனை வலியுறுத்துகின்றன. புறநானூற்றின் பாட்டு ஒன்றில் ஓர் அரசனுக்கு வாழ்த்துக் கூறப்படும் இடத்தில் ஒரு புலவர், "நின் வாழ்நாள் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” ஆகுக என வாழ்த்துகின்றனர். பஃறுளியாறு குமரி ஆறுபோல் இயற்கையாறு அன்று, வெட்டப்பட்ட ஆறு என்றும், அதை வெட்டிய அரசன் இன்னான் என்றும் கூறி, அவனைச் சிறப்பிக்கும் பாடலும் ஒன்று உள்ளது. இவற்றால் இவ்வாறுகள், மலைகள், நாடுகள் வரலாற்றில் இடம் பெற்ற உண்மைச் செய்திகளேயன்றிக் கற்பனைகளோ மிகைக் கூற்றுகளோ அல்ல என்பது உறுதி. மேலும் கற்பனையும் மிகைக் கூற்றும் சீவக சிந்தாமணி,