வருங்காலத் தமிழகம்
31
தனிமொழியான ஒரு கொடுந்தமிழ் மொழியே யென்பது இன்னும் தெளிவாக விளங்கக்கூடும்.
வருங்கால ஆராய்ச்சியாரால் திராவிட மொழிகளில் திருந்திய திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், துளு, குடகம், தெலுங்கு முதலியவைகள் பேசப்படும் இந்தியப் பகுதியைப் பண்பாட்டு முறைப்படி திராவிடநாடு அல்லது பழம் பெருந் தமிழ்நாடு என்று கூறலாம். இது கிட்டத்தட்ட இன்றைய சென்னை மாவட்டத்தையும், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை, மைசூர் முதலிய தனியரசுகளையும், பம்பாய் மாகாணம், ஐதராபாத் தனியரசு ஆகியவற்றின் பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.
திராவிட நாட்டுக்கு வடக்கில், வட இந்தியப் பகுதிகளிலும் மேல்கீழ் எல்லைக்கோடு வரை தனித்தனித் தீவுகளாகப் பழங்குடி மக்கள் இன்னும் தங்கித் திருந்தா நிலையிலுள்ள திராவிட மொழிகள் பேசி வருகின்றனர். இவையும் இமயமலை அடிவாரத்திலுள்ள காஷ்மீரி, நேபாளி, பூட்டானி முதலிய மொழிகளும் வட நாட்டினரால் முற்றிலும் அயல் மொழிகள் என்ற முறையில் 'பேய் மொழிகள்' (பிசாசு பாஷா) என்று கூறப்பட்டன. இவைகூட ஒரு காலத்தில் மிகத் திருந்திய நிலையிலிருந்தன என்று கொள்ளக் று கூடும்.ஏ ஏனெனில் வடமொழியில் இன்று ‘ப்ருகத்கதா, கதா சரித் சாகரம், பஞ்ச தந்திரம்', தமிழில் 'பெருங்கதை' பாரதிதாசன் ‘புரட்சிக்கவி’ ஆகிய பரந்த இலக்கியத் துறைக்கு முதனூலாகக் கருதப்படும் பில்கண மாகவிஞரின் பிருகத் காவியம் பேய் மொழிகளுள் ஒன்றிலேயே முதலில் எழுதப்பட்டதாம்!
'திராவிட நாடு' எனச் சிறப்பாகக் குறிக்கப்படும் இந்தியத் தீவக்குறைக்கு (Peninsula) அப்பாலுள்ள சிந்து கங்கைப்பகுதி, ஆரிய இனம், ஆரிய மொழி, ஆரியப் பண்பாடு ஆகியவற்றுக்கு நிலைக்களமாக, ஆரியாவர்த்தம் என வட நாட்டாரால் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.ஆயினும், இவற்றிலும் திராவிடப் பண்பாடு மிகுந்தும் குறைந்தும் கலந்துள்ளது என்பதை வரலாற்று அறிஞரும் மொழியாராய்ச்சி வல்லுநரும் இப்போது ஒத்துக்கொண்டும் எடுத்துக்காட்டியும் வருகின்றனர். மராத்தியும், ஓரியாவும் சிறப்பாகத் தெலுங்குப் பண்பாடு