பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(32) ||-

அப்பாத்துரையம் - 1

கலந்தவை என்றும்; பிற வட இந்தியப் தாய் மொழிகளிலும் வட மொழியினும் பழம் பாகதம், பாளி ஆகியவற்றிலும், பழைய வேத சொற்களும் திராவிட இலக்கிய அமைதிகளும் மலிந்து காணப்படுகின்றன என்றும் பாண்டர்கார், முக்கர்ஜி முதலிய வடநாட்டறிஞரும், மாக்டானல், கிரியர்ஸன் போன்ற மேனாட்டறிஞரும் விளக்கியுள்ளனர். இருக்கு வேதத்திலேயே தெளிந்த திராவிட வேர்ச்சொற்கள் 11-க்கு மேல் காணப்படுகின்றன என்று பாண்டர்கார் கூறுகின்றார்! இவற்றைத் தெலுங்கு மொழியாராய்ச்சியாளர் முதற்கொண்டு மேற்கொண்டுள்ளனர்.

எனவே, தமிழ்மொழியும் பண்பாடும் தமிழகத்துக்கும் திராவிடத்துக்கும் சிறப்புரிமையானவையாயினும், இந்தியா முழுமைக்குமே பழம்பரப்புக் காரணமாகப் பொது உரிமை உடையவை என்பது தெளிவு. அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மொகஞ்சதாரோ, ஹரப்பாப் புதைபொருள்களின் ஆராய்ச்சியால் இவ்வுண்மைகள் இந்திய நாட்டுப் பழமை ஆராய்ச்சிக்கு உயிர் நிலையான செய்திகள் என்பது வலியுறுத்தப்படுகிறது. சிந்து வெளி நாகரிகத்தின் முழு விவரமும் இன்னும் தெளிவுபடுத்தப்பட வில்லை. எனவே இன்றைக்கு 6000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழக நிலையைப் பற்றி அவற்றின் மூலம் அறியப்படக் கூடும் உண்மைகள் அறுதியிட்டுக் கூறுமாறில்லை, ஆயினும் இன்று ஆரிய நாகரிகம் என்று கொள்ளப்படும் சமய, அறிவியல், கலைக் களஞ்சியங்கள் அத்தனையிலும், முற்றிலுமன்றாயினும், மிகப் பெரும் பகுதியேனும் தமிழர்க்கும் திராவிடர்க்கும் உரிய முதலுரிமையே என்பது பெறப்படும்.