பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10. தமிழகமும் இந்திய வரலாற்றாசிரியரும்

இந்தியப் பெருநிலப் பரப்பின் வரலாறு எழுதுவோர் தென் இந்தியாவை, இந்தியாவில் ஒரு பகுதி, அதுவும் தனித்துப் பிரிந்து நிற்கும் ஒரு சிறு பகுதி என்று கொண்டு அவ்வளவிலேயே அதில் கவனம் செலுத்துகின்றனர். இந்தியப் பரப்பின் மிகப்பழைய மொழியும் இலக்கியமும், மிகப்பழைய பண்பாடுகளும், சமய நெறிகளும் தோற்றுவித்த இந்தியப் பரப்பின் உயர்நிலை அது என்பதை அவர்கள் உணர்வதில்லை. பல சமயங்கள், மொழிகள், பழக்க வழக்கங்கள், அரசியல் முறைகள் நிறைந்து ஒரு கண்டமோ அல்லது ஒரு குட்டி உலகமோ என்று கொள்ளத்தக்க இப் பரப்பில், உண்மையில் ஒற்றுமையும் வளர்ச்சியும் காண விழைவோர் அவ் வகையில் வடநாட்டைத் தேடிப் பயனில்லை. அத்தகைய ஒருமைப் பாட்டிற்கான அடிப்படை உண்மை, தமிழகத்தின் பண்பாடேயாகும்.

ன்று இந்தியாவில் பெரும்பான்மையாகக் காணப்படும் உடல் அமைப்பும் முக வெட்டும், தென் இந்தியர் உடலமைப் பையும் முகவெட்டையுமே ஒத்திருக்கின்றன. இந்தியாவுக்குச் சிறப்பான கலைகள் சிற்பம், ஓவியம், குழைவுக்கலை (Sculpture), இசை, நாட்டியம், நாடகம் முதலியவை யாவும் திராவிட அடிப்படையே யுடையவை.

இன்றும் திராவிட நாட்டிலும் சிறப்பாகத் தமிழ் நாட்டிலுமே அவை பெருவழக்காயுள்ளன. வடமொழி, பாகத, பாளி மொழிகளில் கூடப் பெரும்பகுதி தென் இந்தியக் திராவிடராலும் வட இந்தியாவில் ஆரியருடம் கலந்த திராவிடராலும் ஏற்பட்டவையே.

சமய வகையில் வடநாட்டிற்கு அன்பு நெறியே (பக்தி மார்க்கத்தை)ப் புகட்டியது தென் நாடே. அறிவு நெறியில்