34
அப்பாத்துரையம் - 1
இந்தியாவில் தலைமை வகிக்கும் நெறிகள் நான்கனுள் மூன்று தமிழகத்திலேயே தோன்றியவை. அவை, சங்கரர் மாயாவாத அல்லது கேவல அத்துவித நெறி, சிவநெறி அல்லது சுத்த அத்துவித நெறி, இராமானுசர் திருமால் நெறி அல்லது விசிட்ட அத்துவித நெறி ஆகியவை. மீந்த ஒன்றாகிய மாத்துவர் துவித நெறி கூடக் கன்னட நாட்டில் தோன்றியது. மேலும் இவற்றுக்கு ஆதாரமான உபநிடதங்களும், சமண புத்த நெறிகளும் வடநாட்டில் எழுந்தவையாயினும், வடநாட்டுத் திராவிடரான அரசர் வழியினரால் (சத்திரியரால்) தோற்றுவிக்கப்பட்டவையே.
வடமொழி கூடத் தூய்மைமிக்க சிந்துவெளி ஆரியரால் தோற்றுவிக்கப்பட்டதன்று. திராவிட மயமான கங்கை 'ஆரியரால்' தோற்றுவிக்கப்பட்டது. சமய நெறியைப் போலவே மொழி வகையிலும் இலக்கிய வகையிலும் வடமொழி வளர்ச்சி பெரிதும் தமிழ் வளர்ச்சியைப் பின்பற்றிய தென்பது எக்காரணம் காண்டோ இன்னும் ஆராய்ச்சியாளர் கவனத்தை ஈர்க்க வில்லை! தமிழிலக்கியத்தின் காலவரையறை நெடுநாட் பிழைபட்டு உரைக்கப்பட்டிருந்தே இதற்குக் காரணமாகும். வடமொழியில் தமிழைப் பின்பற்றியே பாட்டில் எதுகை, மோனை, ஓரெழுத்து மோனை ஆகியவை பிற்காலத்தில் மலிந்தன. சமய இலக்கியங்கள், கலை இலக்கியங்கள் பலவும், அறிவியல் துறைகள் பலவும் தமிழிலிருந்தே, அழிந்துபோன வடநாட்டுத் திராவிட மொழி இலக்கியங்களி லிருந்தோ மொழி பெயர்க்கப்பட்டவையேயாகும்.
இவ்வுண்மையை ஒரே
காலத்துள்ள வடமொழி தென்மொழி இலக்கியங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதாலும், பிற ஆரிய இனங்களின் வரலாறுகளைத் துருவி ஒப்பிடுவதாலும் அறியலாம். ஆரியர் தனி நாகரிகம், ஆரியர் பிற மக்களுடன் (சிறப்பாக நாகரிக மிக்க திராவிட செமித்திய மக்களுடன்) கலவாத இடத்தில் அவர்களிடையே காணப்படும் நாகரிக மட்டுமேயாகும். நாகரிகத்தில் இந்திய, கிரேக்க, ரோம ஆரியர் மட்டுமே முன்னேறினர் என்பதன் காரணம், பிற ஆரிய மக்களைவிட அவர்கள், திராவிட செமித்திய இனத்தவருடன் நெருங்கிய உறவு கொண்டனர் என்பதாலேயே, கிரீஸிலும் இத்தாலியிலும் ஆரிய நாகரிகம் எப்படி அந் நாட்டுப்