பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தமிழகம்

35

பழங்குடிகளின் நாகரிகமாகுமோ, அதுபோல் இந்தியாவிலும் ஆரியர் நாகரிகம் உண்மை யில் தமிழர் அல்லது மற்றத் திராவிட வகுப்பார் நாகரித்தின் மறு பெயர்ப்பேயாகும்.

ஆரிய நாகரிகத்தில் நேரடியாகத் தமிழரிடமிருந்தே பகர்ந்து கொண்ட சில பகுதிகள் குறிக்கப்படுதல் நலம். வடமொழியில் ரஸம் பாவம் என்பவை பற்றிய கோட்பாடுகள் கி. பி. 9-வது நூற்றாண்டிலேயே எழுந்தன. தமிழில் தொல்காப்பியர் காலத்திலேயே மெய்ப்பாடுகள் ஆராய்ந்துணரப்பட்டன. எனவே வடமொழியாளரைவிட ஆயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட பழங்காலத்திலேயே இக் கொள்கைகள் தமிழகத்தி லிருந்தன. வடமொழி இலக்கணத்தில் எழுத்திலக்கணமும் சொல்லிலக் கணமும் மட்டுமே உண்டு. யாப்பும் அணியும் தனித்துறைகளாகப் பிற்காலத்தில் விரிக்கப்பட்டன. தமிழிலோ அவை தொன்று தொட்டுத் தொல்காப்பியத்துக்கு முந்தியகால முதற்கொண்டே இலக்கணத்தின் பகுதியாக அமைந்துள்ளன. மேலும் தமிழிலுள்ள பொருளிலக்கணம் இன்றுவரைகூட வட மொழியில் பகர்க்கப் படவில்லை.ஆயினும் முற்கால வட மொழிக் கவிஞரான பாஸன், காளிதாசன் போன்றவர்கள் தமிழ்த் திணைநெறி பிறழாது நூலியற்றியது, அவர்கள் உள்ளத்தில் தமிழ் இலக்கியப் பண்போ தமிழ் இலக்கண அறிவோ நன்கு வேரூன்றியிருக்க வேண்டும் என்பதைக் காட்டும்.

மேற்கூறியவற்றால் தமிழ், இந்தியத் தாய்மொழிகளுள் ஒன்று மட்டுமன்று; வடமொழியை ஒத்த சிறப்புடைய மொழி மட்டும் கூட அன்று; வடமொழியினும் வேறெம் மொழியினும் மேலாக இந்தியாவின் பண்டைப் பெரும் செம்மொழி என்று இந்தியர் யாவராலும் மேற்கொள்ளத்தக்கது. தமிழின் இந் நிலை அறியப் படாதது தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமன்றி, இந்தியாவுக்கும் உலகுக்குமே ஒரு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை!