பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11. உலக மொழிகளில் தமிழுக்குரிய இடம்

நிலப் பரப்பையோ மக்கள் தொகையையோ மட்டும் பார்த்தால் உலக மொழிகளிடையே தமிழுக்குத் தனிச்சிறப்புக் கூறுவதற்கில்லை. சீனமொழி 40 கோடி மக்களாலும், ஆங்கிலம் 22 கோடி மக்களாலும் பேசப்பட்டு வருகின்றன. மற்றும் பேரரசின் பரப்பினாலும் உலக வாணிக வளத்தாலும் ஆங்கிலம் முதன் மொழியாக நிலவுகிறது. இவற்றுடன் தமிழ் நிகராக எண்ணப் படுவதற்கில்லை. ஆங்கிலத்துக்கடுத்தபடியாக இன்றைய உலக நாகரிக நிலையில் உயர்வுடைய பகுதியான மேலை ஐரோப்பாவின் மொழிகளான ஜெர்மனும், பிரஞ்சும், அறிவியல் கலைப் பரப்புக் காரணமாக ஆங்கிலத்துடன் சேர்த்துத் தற்கால முதன் மொழிகளாகக் கருதப்படுகின்றன. இந்தியப் பரப்பில்கூட உருது, இந்தி ஆகியவை கிட்டத்தட்ட 6 கோடி மக்களாலும் வங்காளி 5 கோடி மக்களாலும் பேசப்படுகின்றன.

தற்கால மொழி என்ற முறையில் பெறப்படாத உயர்வு தமிழுக்குத் தொன்மொழி என்ற நிலையில் பெறப்படலாம் என்று நாம் கருதக்கூடும். தென்மொழிகளில் மக்கள் வாழ்க்கைக்கு நிலையான பயனுடையவையாய், முக் காலத்தும் அதன் வழிகாட்டிகளாய் இயங்கும் மொழிகள் உயர்தனிச் செம்மொழிகள் (Classical languages) எனப்படும். கிரேக்க மொழியும் இலத்தீன் மொழியும் ஐரோப்பியரால் உயர்தனிச் செம்மொழிகள் எனப் போற்றப்படுகின்றன. இன்று வடமொழியும் அவற்றுடன் ஒப்ப உயர்தனிச் செம்மொழி என்று ஏற்கப்பட்டிருக்கிறது. உலகின் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் கிரேக்க இலத்தீன் துறைகளுட னொப்ப வடமொழிக்கும் தனித்துறை வகுக்கப்பட்டுள்ளது. இம்

ம்.