பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தமிழகம்

37

மும்முதன் மொழிகளுக்கும் அடுத்தபடியாக உலகப் பெருஞ் சமயங்களின் தாயக மொழிகளாயின எபிரேயம், அரபு முதலி யவையும் பாரசீகமும் இடம் பெறுகின்றன. உயர்தனிச் செம் மொழிகள் நிலையிலன்றாயினும் வரலாற்றுச் சிறப்பும், இடச் சிறப்பும் உடையவையாக ஜஸ்லான்டிக், காதிக், பழம்பாரசீகம் முதலிய சில்லறைத் தொன்மொழிகள் இயங்குகின்றன.

மேற்கூறிய சிறப்புடைய மொழிகள் நீங்கலான மற்ற மொழிகள் தாய் மொழிகள் என்ற முறையிலேயே மதிக்கப்படுகின்றன. இவற்றிலும் இலக்கிய சிறப்புடையவை, பண்பட்டவை, பண்படாதவை என்ற பாகுபாடுகள் வேண்டும்.

இப் பாகுபாடுகளில் தமிழ் எத்தரத்தில் வைக்கத்தக்கது, எத்தரத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பவை பற்றித் தமிழரும் கவலைப்படவில்லை; பிறரும் கருத்தூன்றி ஆராய இடமேற் படாதிருக்கின்றது. நாட்டு வரலாற்றாராய்ச்சியும் இலக்கிய வரலாற்றாராய்ச்சியும் தொடக்க நிலையிலிருந்த காலத்தில் தமிழ் இலக்கியம் மற்ற வட இந்திய, தென் இந்திய மொழிகளினும் பழமையுடையது என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அது எவ்வளவு தொலைவு பழமையுடையது என்பது உணரப்படாமலே இருந்தது. தமிழில் பெரும்பற்றுடைய கால்டுவெல், போப் ஆகியவர்கள்கூட இன்றிருக்கும் தமிழிலக்கியத்தின் மிகப் பழமை வாய்ந்த திருக்குறள், சங்க இலக்கியம் ஆகியவற்றின் காலம் எட்டாம் நூற்றாண்டு என்றே கருதியிருந்தனர். அவை கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவையென்பதும், தொல்காப்பியம் அவற்றினும் மிகத் தொன்மை வாய்ந்ததென்பதும் இப்போது தெளிவுபட்டுள்ளது. தமிழில் இக் காலத்துக்கு முன் இலக்கியமே இல்லை என்று கொண்டால் கூட, இந்தியாவில் தமிழ் வடமொழி நீங்கலான மற்றெல்லா இலக்கியங்களுக்கும் தமிழ் ஆயிர ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் முற்பட்டதாகும். இக் காலத்திலும் பழமையுடைய உலக இலக்கிய மொழிகள் உயர்தனிச் செம்மொழிகளுள் முதன் மூன்று மொழிகளும் எபிரேயமும் மட்டுமேயாகும்.

ஆனால் தமிழில் தொன்மை மிக்கவை என்று நாம் கொள்ளும் நூல்களுள் எதுவும் கலைப்பண்பாட்டு வகையில்