(38) ||-
ய
அப்பாத்துரையம் - 1
தொடக்கக்கால இலக்கியத்தைச் சார்ந்த நூலாகக் காணவில்லை. தொடக்கக் கால நாகரிகத்தைக் குறிப்பதாகவும் இல்லை. முதல் இலக்கிய நூலான திருக்குறள், அன்றும் இன்றும் தமிழகத்தில் மட்டுமன்றி உலகிலேயே ஒப்பும் உயர்வுமற்ற தனிப்பெருநூல். தொல்காப்பியமும் இன்றிருக்கும் இலக்கணங்களுள் பழமை யுடையதாயினும் பிற்கால இலக்கண நூல்கள் அனைத்தையும் விட விரிவானது. சங்க இலக்கிய நூல்களும் முற்ற வளர்ந்த ஓர் லக்கியத்தின் சிதறிய துணுக்குகளின் தொகைகளேயாம். மேலும் தொல்காப்பியத்துக்கு முன்னும் விரிந்த இலக்கண இலக்கியங்கள் இருந்தன என்பதை அதில் காணப்படும் அகச்சான்றுகளாலேயே உய்த்தறியலாம். மரபுடையோ இதற்கு நெடுங்கால முன்னதாகவே இருபெருஞ் சங்கங்கள் இருந்ததாகவும், இன்றிருக்கும் இயல் பகுதி மட்டுமன்றி அக் காலத்தில் இசை, நாடகம் என்ற இரு வேறு பெரும் பிரிவு களிருந்ததாகவும் குறிப்பதுடன், அத்தகைய நூல்கள் பலவற்றின் பெயர்களும் பகுதிகளும் மேற்கோளுரைகளும் தருகின்றது. இவற்றை ஒரு சார்பின்றி நோக்குவோர் தமிழிலக்கியம் உண்மை யில் வடமொழி இலக்கியத்தினும் மற்றெவ்விலக்கியத்தினும் மிக்க தொன்மையுடையதாயிருந்திருக்க வேண்டும் என்பதைக் காணாதிரார்.
ஆகவே தமிழில் தொன்மை ஒன்றை நோக்கினாலும் உயர் தனிச் செம்மொழிகளுள் அது இடத்பெறத் தக்கது என்பது தெளிவு. ஆனால் அதன் தனிச்சிறப்பு இதனுடன் நின்றுவிட வில்லை. இலக்கியப் பரப்பிலும் இலக்கியச் சிறப்பிலும் அதற்குத் தனி உரிமைகள் உண்டு. அதனோடு பிற உயர்தனிச் செம்மொழிகள் அனைத்தும் இறந்துபட்ட மொழிகளாயிருக்க, தமிழ் ஒன்று மட்டும் இன்றும், உயிருடனியங்குவதுடனன்றி, இன்னும் எத்தனையோ தடங்கல்களையும் புறக்கணிப்புகளையும் பூசல்களையும் தாண்டி வளம்பெற்று வளரத்தக்க நிலையை உடையதாகவே இருக்கிறது.
உயர்தனிச் செம்மொழிகளில்கூட அரிய இன்னொரு உலகப் பொதுப் பயனும் தமிழுக்கு உண்டு. அதுவே அதன் பண்பாட்டு, வரலாற்றுச் சிறப்பு ஆகும். தமிழ், தமிழரின் தாய்மொழி மட்டுமன்று; திராவிட மொழிகளிடையே தொன்மை மிக்க மொழியாகும். அதனைத் திராவிடத்தாய் என்று