பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 1

தமிழிளைஞர் தமிழகத்தின் வருங்காலத்தை மேம்படுத்தப் பாடுபட்டால், பழங் காலப் புகழ் உலக மக்கள் காதில் பழம் புராணமாகத் தோன்ற மாட்டாது; புராணக் கூற்றுக்கள் போல நம்பகமற்றதாகவும் இராது. தமிழில் உண்மை அன்பும் அதன் பழம்பெருமையில் நம்பிக்கையுமுடையவர்கள் புதுப்பெருமை உண்டுபண்ண முயலாவிட்டால், அவர்கள் பற்றும் பெருமையும் போலிப்பசப்புக்களேயன்றி வேறல்லவென்று கூறலாம்.