பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




13. பழங்காலக் குறைகள்

இடைக்காலத்தின் குறைகளை மட்டும் கூறிச் ‘சீர்திருத்தக் காரர்' எனத் தம்மைக் கூறிக்கொள்பவர் சிலர் மன நிறைவு பெறுவதுண்டு.இவர்கள் தமிழினிடத்தில் உண்மையான அன்பும் தமிழரிடத்திலும் தமிழினத்தினிடமும் உண்மையான மதிப்பும் உடையவர்கள்தான். ஆனால் இவர்களும் போலிச் சமயப் பசப்பிலீடுபட்டுக் குருட்டுப் பழமை நாடுபவர்களே. அவர்கள் ‘தமிழன்பு'ம் தமிழ் நோக்கும் இறந்தகாலம் தழுவியது, இறந்தகால நோக்குடையது. அவர்கள் தமிழ்ப்பற்றில் தமிழர் பற்று முழு ம் பெறாது.

மேலும் தமிழ் எவ்வளவு உயர்வுடையதாய் ஒருக்காலிருந்தே திருப்பினும் அப் பழம்புகழ் நம் தற்காலத் துயரிடையே ஆறுதல் தர உதவுமேயன்றி இனியும் நம்மை அப் புகழுக்குரியவராக்க உதவாது உண்மையில் நம்மிடம் அழிந்தது போக மீந்த இலக்கியம் அதனை உய்த்துணரவும் பின்பற்றவும் உதவுமேயன்றி மீட்டுத்தரப் போதிய தன்று. எடுத்துக்காட்டாக, சிலப்பதி காரத்தால் பண்டைத் தமிழர்க்குரிய யாழ் முதலிய பலவகை இசைக்கருவிகள், விரிவான இசை நூல்கள், நாடக வகைகள் ஆகியவற்றைப் பற்றி அறிகிறோம். ஆனால் அவற்றை மீட்டும் உயிர்ப்பித்து வழங்கச் செய்யப் போதிய விவரங்கள் அதில் கிடையா. அதில் கூறப்பட்ட நூல்களில் பெரும்பாலானவை இறந்து போனதால் இனி அவ்வறிவு திரும்பிவரத் தக்கதன்று. மீந்த நூல்களால் நாம் அறிவதெல்லாம் நம் மரபு பெரிது, நம் குருதியில் பேராற்றலுள்ளது என்ற ஊக்க உணர்ச்சி மட்டுமே. ஆதலின் பழங்கால இலக்கியம் நம் எதிர்காலப் பெருமைக்கு வழிகாட்டியாகுமேயன்றி, நம்மை அந் நிலைக்குக் கொண்டு செல்லத்தக்க ஊர்தி ஆய்விடமாட்டாது.