பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் - 1

பண்டைய இலக்கியப் பரப்பை முழுதும் அறிவு முடியாத நம் இன்றைய நிலையில் மீந்த இலக்கியத்தின் அளவு கண்டு நாம் வியப்படைவது இயற்கையே. மீந்த நிலையிலேயே அது மற்ற முழு இலக்கியங்களுடன் பெருமையுடன் ஒப்பிடக்கூடியதாயிருப்பதும் உண்மையே. ஆனால் ஒரு நாடு எவ்வளவு பெருமையுடைய தாயினும் அது உலகன்று. ஒரு மரம் எவ்வளவு வானளாவி நாற்றிசையும் பரந்து வளர்ந்ததாயினும் அது தோப்பாகாது. உலகில் பிற நாடுகள் நாகரிகமற்றிருந்த காலையில், தமிழகம் இறுமாந்து தனித்து வாழ முடிந்திருக்கலாம். ஆனால் உலக நாகரிகம் வளம் பெற்றோங்கியிருக்கும் இந்நாளில் இறுமாப்பு, அழிவு நோக்கிச் செல்லவே வகை செய்யும்.

இருந்தவன் எழுந்திருப்பதற்குள் நடந்தவன் காதவழி என்ற உண்மையை இன்றைய தமிழனின் நாகரிக வரலாற்றில் காணலாம். ஆமையின் நடைகண்டு எள்ளி நகையாடிய முயல் இடைவழியில் உறங்க, ஆமை ஊர்ந்து சென்று பந்தயத்தில் வென்ற கதை யாவரும் அறிந்ததே. நாம் முயலினதுபோன்ற தன்மறப்புக்கு ஆளாகலாகாது. இப்போதே இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆழ்ந்த துயிலால் தமிழக வாழ்விற்கு நெடுநாள் பிந்திப் பிறந்த நாகரிகங்கள் தமிழைத் தொலைவில் நின்று நகையாடவோ, அண்மையில் வந்து எட்டி உதைக்கவோ, தலை மீது அமர்ந்தழிக்கவோ தலைப்படுகின்றன. இந் நிலையில் இறுமாப்பும் வீம்புரையும் அறிவுடைய நிலையாகா. தன்மதிப்புணர்ச்சியும் விடாமுயற்சியும் தன்னைத் தானே திருத்தும் தறுகண்மையுமே வேண்டப்படுவன.

பழந்தமிழர் இலக்கியத்தின் பெருங்குறைபாடு உரைநடை இலக்கியம் இல்லாமையேயாகும். அறிவு நூல்களைக் கூட அவர்கள் யாப்பிலேயே செய்திருந்தனர்.8 ஆம் நூற்றாண்டுக்குப் பின் நூல்களுக்குக் குறிப்புரையும் விளக்க உரையும் எழுந்தன. ஆனால் இவை கருவி நூல்களேயன்றி இலக்கியமாகா. நடையும் புலவர் புலமையைக் காட்டும் நிலையில் இருந்ததேயன்றிக் கலைப் பண்பு அல்லது அழகு, எளிமைநயம் ஆகியவையுடைய தாயில்லை உரைநடை ஏற்படாததற்கு அக்காலத்தில் அச்சுப்பொறி யில்லாமையும் நூல்களை மனப்பாடம் செய்ய வேண்டிய நிலைமை யிருந்ததும் ஓரளவு காரணமாகும். பிற இந்திய