வருங்காலத் தமிழகம்
45
மொழிகளிலும் இக் குறைபாடு அண்மைவரை இருந்தது. ஆயினும் பண்டைய கிரேக்கர் இலக்கியம் அக் காலத்தும் உரைநடை இலக்கியம் உடையதாயிருந்தது. பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் வேதநாயகம் பிள்ளை, மறைமலை யடிகள், நமச்சிவாய முதலியோர் முதலிய புலவர்கள் முயற்சியால், உரைநடை தலையோங்கியிருக்கிறது. ஆயினும் இன்னும் பிற தற்கால மொழிகளுடனொப்பாகத் தமிழ் உரை நடையும், உரைநடை இலக்கியமும் மேம்பாடு பெறவில்லை.
தமிழில் வரலாறுகள் இல்லை. சங்க இலக்கியம், அதன் நிகழ் கால நோக்கு, வாய்மை ஆகியவை காரணமாக அளவு வரலாற்று ஆராய்ச்சிக்கேனும் பயனுடையது. பிற்கால இடைக் கால இலக் கியங்கள் இவ்வகையிலும் பிற்போக்குடையது. அறிவியல் துறையில் பழைய நூலுரைகளால் தமிழர் உயர்நிலை எய்தியவர் என்று அறியப்படினும், இன்று அத்துறையிலக்கியம் இல்லையென்றே சொல்லலாம். மேலும் இன்று மேல்நாடுகள் இத்துறையில் எவ்வளவோ முன்னேறிவிட்டன. தமிழில் அவற்றை மொழி பெயர்ப்பதற்கான கலைச் சொற்கள்கூடக் கிடைப்பதில்லை என்று குறைகூட வேண்டியிருக்கிறது.
இலக்கியத்தின் பகுதிகளாகக் கருதப்பட்டிருந்த நாடகம் சை என்ற கலைகளும் முன் இருந்தனவேயன்றி இன்று அருகின. 'இசைக்குத் தெலுங்கு' என்ற எண்ணம் சிலகாலமாய் ஏற்பட்டிருக் கிறது. தமிழிசை இயக்கம் இத்துறையைச் சீர்திருத்திப் பண்டைப் பெருமையை மீட்டும் ஏற்படுத்த முயல்கிறது. நாடகத்துறையில் தமிழின் பஞ்சம் வியப்புக்கிடமாகவேயிருக்கிறது. பழம் பெருமையைச் சுட்டிக்காட்ட மட்டுமே சிலப்பதிகாரம் உதவும். அதுவும் நாடகக் காப்பியம் மட்டுமே, முழுவதும் நாடக நூல் அன்று. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் நாடக நூல் ஏற்பட்டதில்லை. வட மொழியில் ‘காவ்யேஷூ நாடகம் ரம்யம்’ அதாவது, காவியங்களில் நாடகமே சிறப்புடையது, என்று கூறப்படுகிறது. வடமொழி இலக்கியத்திலும் நாடகப் பகுதி உயர்வும் பேரளவும் உடையது. எடுத்ததற்கெல்லாம் வட மொழியைப் பின்பற்றிய பிற்காலப் புலவர்கள்கூட வடமொழியின் தலைசிறந்த இப் பகுதியில் நாட்டம் செலுத்தாதது பெருவியப்பே! நாடகத்தின் பகுதியாகிய கூத்து (நாட்டியம்) இயன்றளவு தமிழ்நாட்டில் தழைத்து வருகிறது. ஆயினும் அதனை இன்னும்