46
அப்பாத்துரையம் - 1
வட நாட்டாரும் பிற நாட்டாருமே போற்ற வேண்டியிருக்கிறது. அதனை ஊக்கி வளர்க்கத் தமிழர் இன்னும் முனையவில்லை.
அரசியல் வாழ்வில் தமிழர் ஊர், நகர் அரசியல்களில் கொண்ட பொறுப்பாட்சி முறை நாட்டின் பொது அரசியலில் இடத்பெறாது போயிற்று. தமிழரசரும் இந்தியப் பிறபகுதி அரசரும் நல்லரசராகவும் தீய அரசராகவும் (செங்கோலரசன், கொடுங் கோலரசனாக) வகுக்கப்பட்டனரேயன்றி வரையப்பட்ட அரசு (Consititutional monarchy), தற்சார்பு அரசு, (despotism) என்று வகுக்கப்படவில்லை. அரசியல் இந் நிலையில் ஒரு பேரறிவியல் துறையாக விளங்க இடமில்லாது போயிற்று. திருக்குறள் முதலிய தமிழ் நூல்களில் அரசியல் பகுதியில் அரசன் கடமை, அமைச்சர் கடமை முதலியவைகள் தான் இடம்பெற்றன. அரசியல்வகை, குடிகள் உரிமைகள், ஆட்சிமுறைப் பாகுபாடுகள் அகியவை கூறப்படவில்லை. நூல்களை விடுத்து வரலாற்று நிகழ்ச்சிகளை நோக்கினாலும், தமிழ் நாட்டரசர்களும் நாடு முழுவதையும் நேரிடை ஆட்சி புரியாமல் சிற்றரசர்களை அடக்கி அவர்கள் மூலமே ஆண்டனர் என்பது தெளிவாகும். பேரரசுகள் நாடு முழுவதையும் ஒற்றுமைப் படுத்தாது போனதற்கும் நீண்டகாலம் நிலைக்காததற்கும் இதுவே காரணம்.
சமய வாழ்வில் ‘இடைக்காலத்' தமிழகத்தில்தான் பெரிதும் எதிர்ப்புணர்ச்சியும் குறுகிய நோக்கமும் இருந்தன. சங்க காலத்தில் பரந்த மனப்பான்மையும் அப்பரவும் நிலவின. அதோடு வாழ்க்கை சமயத்துக்கு அடிமைப்படவில்லை. சமயம் நல்வாழ்வின் ஒரு பகுதி என்பது உணரப்பட்டிருந்தது. ஆயினும் ஒப்பரவு என்ற பெயரால் அயலார் பண்புகள், பழக்கங்கள் ஆகியவற்றுக்குப் பேராதரவு கிடைத்ததேயன்றித் தற்பண்பு பேணப்படவில்லை. இன்னும் தமிழர் வாழ்வில் இக் குறையையும் இதனால் ஏற்படும் அடிமை மனப்பான்மையையும் காணலாம். தமிழன் பிறர் சமயத்தையும் பாண்பாட்டையும் தனதாகக் கொள்ள இன்றும் இசைந்து வருவது அறிவுநோக்குடன் பார்ப்பவரும் வியப்பையே ஊட்டும்.
தன் சமயம் தன்னைத் தாழ்ந்தவனாகவும், தன் மொழியை இழி மொழியாகவும் கருதவோ நடத்தவோ செய்யுமா என்று தமிழன் எண்ணிப் பார்ப்பதில்லை. பிற சமயத்துக்கு விட்டுக்