வருங்காலத் தமிழகம்
47
கொடுப்பது பெருந்தன்மை என்று எண்ணுகிறோம்.ஆம்.ஆனால் தன்மறுப்பு என்றுகூட எண்ணாததும் அவன் சமய வாழ்வை அழித்து விட்டது, அழித்து வருகிறது என்பதை இளைஞருலகம் உணர்ந்து வருகிறது. ஆயினும் பொதுமக்கள் இன்னும் பெரும் பான்மையாய்த் தம் பண்பை, இனத்தை, தம் தோழரை இழிவு படுத்தும் கொள்கையைத் தம் சமயமெனக் கொண்டு, தெரிந்தோ தெரியாமலோ தம் நாட்டுக்கும் மொழிக்கும் பண்பாட்டுக்கும் பகைவராயிருந்து வருகின்றனர்.
வங்கநாட்டில், பீகாரில் பஞ்சம் என்றால், பட்டினி என்றால், தமிழன், பணம் கொட்டித்தரத் தயங்குவதில்லை. தமிழ் நாட்டில் பஞ்சம் என்றால் வடநாட்டாரும் பிற நாட்டவரும் அதைச் சட்டைச் செய்வதில்லை. தமிழன் சட்டை செய்யாதது மட்டுமல்ல, சட்டை செய்வதில்லை என்பதை எண்ணிப் பார்ப்பதுமில்லை. தமிழன் பிற நாட்டினரைச் சமய, அரசியல், கல்வித் தலைவராக ஏற்க மறுப்பதில்லை, ஏற்க முந்தவும் செய்கிறான்! ஆனால் தமிழ்நாட்டுப் பெரியார் தமிழரிடையும் சிறுமைப்பட்டுழல் கின்றனர்- வெளியுலகம் அவர்களையோ அவர்கள் நாட்டையோ தம் உலகத்தின் ஒரு பகுதி என்றுகூட எண்ணுவதில்லை.
க
தமிழனிடையே தொழில் பற்றிய பிரிவுகள் உண்டு. அவை இயற்கை ஒழுங்கை ஒட்டி வரன்முறையாய் (பரம்பரையாய்) வருவதும் உண்டு. ஆனால் இவ்வகையில் கட்டுப்பாடோ உயர்வு தாழ்வோ இல்லை. தமிழ் நூல்களில் அப்படி உயர்வு தாழ்வு இருந்தால்கூட அதில் வேளாளர்க்கே முதல் நிலை உயர்வு தரப்பட்டிருக்கும். ஆனால் இன்று தமிழன் மேற்கொள்ளும் பிறநாட்டுச் சமய முறையில் பிறப்பால் வகுப்பும், மாற்ற முடியாத வகுப்பும், தொழில் மாறுபாட்டால் விலகாத வகுப்பு வேற்றுமையும் உண்டு. உழைக்கும் வேளாளன் உயர்வுக்கு மாறாக, உழைக்காது அண்டியும் சுருண்டியும் ஏய்த்தும் பிழைக்கும் சோம்பர்க்கு முதல் மதிப்பு தரப்படுகிறது. தமிழர் ல்லறத்தையே அடிப்படை அறமாகக் கொண்டனர். அவர்கள் துறவறத்தை உயர்வாகக் கொள்ளினும் அத்துறவறம் இன்று தமிழன் கொள்ளும் அன்பு துறந்த போலித் துறவறமன்று; தன் நலந்துறந்த துறவறமேயாகும். வகுப்பு வேற்றுமையை ஆதரித்துப்