பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் 1

பேசியோ, அல்லது பேச்சில் எதிர்த்து நடையில் ஆதரித்தோ பசப்பும் துறவறம் அன்று; அதனைச் சீறி உடைக்கும் துறவறமாகும்.

பண்டைத் தமிழர் இவ் வகையில் இடைக்கால தற்காலத் தமிழரினும் மேம்பட்டவராயினும், இடைக்காலக் கேடுகளுக்குத் தெரிந்தோ தெரியாமலோ வழிகோலினர் என்பது உண்மை. அவர்கள் தன்னலந்துறந்த பெரியாராகிய அறிவர், அந்தணர் ஆகியயோரைத் தலைமேற்கொண்டு மதித்தனர். ஆனால் தோற்றத்தை மேலீடாகக் கண்டு ஏமாறும் குணம் அவர்களிடம் படிப்படியாக வளர்ந்தது. உவர் மண் தோய்ந்த வண்ணானை முழு நீறு பூசிய முனிவர் என்று கொண்ட பெருமையும், நீறு பூசி ஏய்த்த பகை வனுக்கு அடியார் பணிந்த கதையும் அம்மயக்கத்திற்கு அறிகுறிகள் ஆகும்.

தமிழர் போலி ஒப்புரவால் தமிழர் பண்பாடு கெட்டது; தமிழர் செல்வமும் கலையும் உயர்வும் கெட்டன, அதனுடன் ன் சார்ந்த இன்னொரு போலி நற்குணத்தால், தமிழ் நூல்கள் அறம் ஈகை என்பவற்றைத் தமிழர் உயர்நிலைப் பண்புகள் என்று போற்றுகின்றன. எவரும் இதனைப் போற்றுதல் தகுதியேயாகும். வறியார்க் கீதல், பிறர் நலம் புதிபவர்க் கீதல், உழைப்பவர்க்கும் கலைநலம் பேணி உழைப்பவர்க்கும் ஊக்கமளிக்க ஈதல், உற்ற விடத்து நண்பர்க்கும் யாவர்க்குமீதல் ஆகியவை அப்பழுக்கற்ற நற்பண்புகளே, ஆனால் தமிழன் படிப்படியாக வறிய தோற்றத்தை வறுமையாகக் கொண்டு உழையாத சோம்பன், எத்தன் ஆகிய வருக்கும்; அறிவர் அந்தணர் தோற்றத்தை அறிவு, அந்தண்மை கொண்ட தன்னலச் சூழ்ச்சிப் பகைவருக்கும் வெறிமிக்க மூடருக்கும் ஈதலை ஈகை எனப் பாராட்டியழிவுறத் தொடங் கினான்.நண்பர்களையும் உயிர்களையும் விடுத்து கல்லினுக்கும் கற்கோயிலுக்கும் கல்லினும் கொடிய நெஞ்சுடைய வகுப்புப் பற்றாளர்களுக்கும் ஈதலே இந்நாளில் ஈகையெனக் கொள்கை பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில் அவன் உவந்தீவதுடன் நில்லாது, தன்னினத்தைக் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சிக்காக ஈயவும், தன் பழிச் செயல்களை மறைப்பதற்காக ஈயவும், அஞ்சி அஞ்சி ஈயவும் தொடங்கி விட்டான். இவற்றை உட்கொண்ட புதுக் கவிஞர் பாரதி,