வருங்காலத் தமிழகம்
51
விடுதலை. தமிழருக்கு விடுதலை என்பதெல்லாம் ஓர் அடிமையினின்றும் விடுபட்டு இன்னோர் அடிமை நிலையை ஏற்பதே. தான் அடிமையாகப் பிறந்தவன், அதுவே இயற்கையின் ஒழுங்கு என்ற எண்ணம் அவன் மனத்தில் வேரூன்றியிருக்கிறது. தற்காலப் பெரியார் ஒருவர் கூறுகிறபடி 'தமிழன் ஒரு வகையில் நாயின் பண்புடையவன். நாய்போல் அவன் பிற இனத்தினிடம் நன்றி கொள்வான்; நயப்புக் கொள்வான். தன் தோழரிடம் மட்டுமே வெறுப்பு, ஆணவம், பொறாமை முதலியவை எல்லாம் டம் பெறும்.
தற்காலத் தமிழர் அரசியலில் ஆங்கிலத்தையும், புத்தரசியல் இயக்கத்தில் இந்தியையும், சமயத்துறையில் வடமொழி போன்ற மொழிகளையும் இசையில் தெலுங்கையும் முதன் மொழியாகக் கொண்டுள்ளனர். தமிழன் 100-க்கு ஏழு எட்டு மேனியே எழுத்து மணம் கூட உடையவன் என்பதும்; இச் சிலரும் பெரும்பாலும் தமிழ்நாட்டில் வாழும் பிற நாட்டாரும் பிற இனத்தாருமே என்பதும்; அதிலும் பெண்பாலார் நூற்றுக்கு ஒருவர்கூடக் கிடை யாது என்பதும் இதன் பயன் என்பதை எத்தனைபேர் எண்ணிப் பார்ப்பவர்? இவ் வயல் மொழிகளில் இடைக்காலத்தில் ஆங்கிலமும் இந்தியும் தெலுங்கும் கிடையா. வடமொழி ஒன்றே தமிழை அழுத்தி வந்தது. நூல்களும் பெரும்பாலும் மொழிபெயர்ப்புக்களும் விளம்பர நூல்களுமே. இந்நிலையில் கல்விநிலை இன்றைவிடச் சற்று மேம்பட்ட தென்பதை அவ் விளம்பர நூல்கள் நல்ல இலக்கிய நடையில் எழுதப் பட்டிருப்பதிலிருந்தும், சமயத்துறையில் கல்வியறிவு மிக்க நங்கையர் தலைமைநிலை பெற்றிருந்ததிலிருந்தும் காணலாம். முற்காலத் தமிழகத்திலோ வடமொழி அழுத்தம் மிகக் குறைவு. நூல்கள் கிட்டத்தட்ட முற்றிலும் தமிழ் முதல் நூல்கள். அதற்கேற்பத் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பெரும்புலவர் ஒரே காலத்தில் வாழ்ந்தனர் என்றும், அவர்களிடையே எல்லாத் தொழிலாளரும் வகுப்பினரும் இருந்தனர் என்றும், தலைசிறந்த வர்களும் பெருந் தொகையினரும் பெண் பாலர் என்றும் காண்கிறோம். இன்றைய தமிழகம் இதனின்றும் படிக்க வேண்டும் படிப்பினை ஒன்றே. தமிழ்நாட்டில் தமிழ் முதலிடம் பெற்றாலன்றித் தமிழர் வகுப்பு வேறுபாடின்றி, பால்வேறுபாடின்றி, தொழில் வேறு பாடின்றிக் கல்வியறிவு பெறார்.