பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




15. வருங்காலத் திட்டம்

இன்றைய ஊழி, உலகின் புரட்சி ஊழி ஆகும். கி. பி. 1500 வரை உலக நாகரிகத்தில் மிகவும் பிற்போக்கு நிலையில் இருந்த ஐரோப்பா, தன் இருண்ட இடைக்காலத் தூக்கத்தை உதறித்தள்ளி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சி யடைந்து வருகிறது. கீழ்நாடுகள் பல்லாயிர ஆண்டுக்கணக்கில் பொய்யாக்கிவிட்டன. இன்று உலகம் என்றால் மேல்நாட்டுலகம் என்ற நிலைமை வந்துவிட்டது. அரசியல்,வாணிகம், கலை ஆகிய எல்லாவகையிலும் கீழ்நாடுகள் மேல்நாடுகளின் நிழலாக இருந்து வருகின்றன.

இருபதாம் நூற்றாண்டில் கீழ்நாடுகள்கூட விழிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஜப்பான் மேல்நாட்டு முறையிலேயே மேல் நாடுகளுடன் போட்டியிட்டது. வடநாடு இரண்டு உலகப் போர்களையும் இந்திய நாட்டுரிமை (தேசீய) இயக்கத்தையும் பயன்படுத்திப் பொருளியல் துறையில் முன்னேறி வருகிறது. ஆனால் தமிழ்நாடு இன்னும் கனவு காணும் படியைத்தான் அடைந்திருக்கிறது. பதக்குக் கனவு காண்பவன் உழக்கு வெற்றி யடைவான். தமிழர் கனவிலும் உழக்கு என்று பேசவே அஞ்சு கின்றனர்.

ஆங்கில நாடு அரசியலிலும் பொருளியலிலும் மற்ற நாடு களுக்கு முந்திக்கொண்டு வளர்ச்சியடைந்து விட்டது.ஜெர்மனி, தன் அறிவியல் திறத்தால் அதனுடன் அதனுடன் போட்டியிடத் தொடங்கிற்று. ஆனால் பிரான்சு 18 ஆம் நூற்றாண்டு வரை அரசியல் துறையில் இருண்டகால நிலையிலேயே உழன்றது. ரூஸோ, வால்ட்டேர் முதலிய பேரறிஞர்கள் தம் எழுதுகோலைச் சாட்டையாகப் பயன்படுத்தி மக்களைத் தட்டி எழுப்பின. மக்கள் தம் அரசியல் திருந்தினாலன்றி வாழ்வுந் திருந்தாதென்று கருதி அரசியல் புரட்சியில் முனைந்தினர். பல தடவை அப் புரட்சி