வருங்காலத் தமிழகம்
53
தோல்வியுறுவதாகத் தோற்றினும் அது படிப்படியாக பிரான்சுக்குப் புது அரசியல் வழங்கிற்று. உலகுக்கும் புரட்சி மூலம் வெற்றி காண முடியும் என்று காட்டிற்று. ஆனால் வெறும் அரசியல் புரட்சி முழு வெற்றி காணாது; அதனுடனாகவோ, அதனினும் முந்தியோ பொருளியல் புரட்சி ஏற்பட்டால் தான் பொருளியல் வாழ்வில் பிந்திய கீழ் நாடுகள் முன்னேற முடியும் என்பதை உருசிய (ரஷ்ய)ப் புரட்சி காட்டிற்று.
தமிழ்நாடோ அரசியலிலும் பொருளியலிலும் மட்டுமன்றி வாழ்வியலிலும் பின்னடைந்து நிற்கிறது. இந்திய நாட்டுரிமைக் கழகம் அரசியல் புரட்சியுடன் அமைந்து நிற்கிறது. விடுதலைக் குறிக்கோள் அதன் தலைவர்களால் ‘இராம அரசு' என்று கூறப் படுகிறது. அதாவது புரட்சி, அரசியலுடன் நின்று விட வேண்டுமேயன்றிப் பொருளியலிலும் வாழ்வியலிலும் புரட்சி கூடாது என்பது அவர்கள் நிலை. நாட்டுரிமைக் கழகத்தில் ளைஞர் குழுத் தலைவர்களும் சம உரிமையாளர்களும் (அபேதவாதிகளும்) பொது உடைமையாளர்களும் பொருளியல் புரட்சியுடன் கூடிய அரசியல் புரட்சி கோருகின்றனர். ஆனால் அரசியல் கூரையும் பொருளியல் சுவரும் மட்டுமன்றி, வாழ்வியல் அடிப்படையே சீர்கெட்டு நிற்கும் தமிழகம் உலகில் உருசியப் புரட்சியிலும் அடிப்படையான புரட்சி காணினல்லாமல் வெற்றி காண முடியாது. ஆகவே தமிழ் இளைஞர் வாழ்வியலிலும் பொருளியலிலும் அரசியலிலும் ஒரேயடியான முக்கூட்டுப் புரட்சிக்கு வழிகோல வேண்டும்.
மேலும் இன்று உலகில் முன்னணியில் நிற்கும் நாடுகள் ஒற்றுமை, தகுதி ஆகிய சாக்குகளால் தம் ஆட்சியில் உலகை ஆட்டி வைக்கச் சூழ்ச்சி செய்கின்றன. நாட்டுரிமை இயக்கம், உலகில் பிற்பட்ட இந்தியா தனிவாழ்வு பெற்றாலன்றி முன்னேறாது என்பதை உணர்ந்து விடுதலை கோருகிறது. உலகில் தகுதி பற்றிய ஆட்சி ஏற்படுவதானால், ஆங்கில ஆட்சிதான் இன்னும் உலகை ஆட்டி வைக்க நேரிடும். அது போலவே நாம் தனித் தகுதி வேண்டுகிறோம். இந்திய பரப்புக்கு உண்மையில் நல் வாழ்வு வேண்டுவோர் இந்தியாவில் தமிழகம் போன்ற பிறபட்ட பகுதிகளுக்கும் சரிநிலை (சமத்துவம்) வழங்க வேண்டும். சரிநிலை யில்லா ஒற்றுமை ஒற்றுமையாகாது, சுரண்டலே யாகும். ஆகவே