54
அப்பாத்துரையம் - 1
தமிழன் காணும் கனவில் சரி நிலையும் சரிநிலைத் தகுதியும் முதலிடம் பெற்று, அவற்றின் அடிப்படையிலேயே நாட்டு ஒற்றுமை, உலக ஒற்றுமை ஏற்பட வேண்டும்.
நாட்டு வாழ்வின் அடிப்படைப் பண்பு தாய்மொழியே யென்பதை இப்போது உலக மக்கள் உணர்ந்துகொண்டு விட்டனர். கல்வியும் கலையும் அறிவியலும் தாய்மொழி வாயிலாக அன்றி வளரா. கல்வியிலும் தாய்மொழிக் கல்வியன்றிப் பிற கல்விகள் கிளிப்பிள்ளைப் பேச்சேயன்றி வேறன்று. தமிழரிடை நாட்டுரிமைக் கழகத்தார் தமிழுக்கு முதலிடம் என்று பேசுகின்றனராயினும் அதுவகையில் முனைந்து விராயாமல் ஆங்கிலத்துடன் வேறு மொழிகக்கும் இடம் தேடுகின்றனர். நாட்டுரிமைப் பண்பு தாய்மொழிப் பற்றுடன் ஒன்றுபடும் நாளில் பிற மொழிகளுக்கு மதிப்பு இரண்டாம்தரச் செய்தியே யாகவேண்டும். அத்துடன் பிற மொழி யாயினும் ஆங்கிலம் தமிழரிடை சரிநிலையை ஓரளவு தந்த மொழி; பகுத்தறிவு விளக்கத்துக்கு வகை செய்த மொழி, தமிழர் அறிவியல் துறையில் வளர்ச்சியடைய ஆங்கிலம் இன்னும் நெடுங்காலம் உதவும். அதனை வெறுத்து, தமிழினும் ஆயிரமடங்கு பிற்போக்குடைய வடநாட்டு மொழிகளைத் தமிழர் மேற்கொள்ளுதல், மேற்கொள்ளத் தூண்டுதல் மறைமுகமான தமிழ்க்கொலையே யாகும். தமிழ், தமிழர் பண்பாட்டின் கொடி. ஆங்கிலம், பகுத் தறிவின் கொடி. வடநாட்டு மொழிகள் இன்னும் பிற்போக்கு, பூசல், வகுப்பு வேற்றுமை ஆகியவற்றின் கொடியேயாகும். ஆகவே ஆங்கிலம் அகல்வதாயின் அவ்விடத்தின் பெரும்பகுதியைத் தமிழே கொள்ளும்படி செய்யத் தமிழராவோர் விரைதல் வேண்டும். இந்தியப் பொது இயக்கம், உலக இயக்கம் ஆகியவை அதனைப் புறக்கணித்தால், தமிழர் தமக்கெனத் தனி இயக்கம் மேற்கொள்ளல் இன்றியமையாதது. அல்லது தமிழக நாட்டுரிமைக் கழகம் பெருநிலப்பரப்புக் கழகத்தினிடம் பேரம் செய்தோ, போராடியோ, தனித்து நின்றோ உழைக்க வேண்டும்.
இருண்ட காலத்தினின்றும் விழித்த ஐரோப்பா முதலில் தன் வளர்ச்சிக்குத் துணையாகக் கொண்ட தாய்ப்பால் கிரேக்க இலக்கியமே. ஏன் அது கிரேக்க இலக்கியமாயிருக்க வேண்டும்? அன்று ஐரோப்பிய நாகரிகத்திலில்லாத பகுத்தறிவுச் சத்து அதில்