பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

அப்பாத்துரையம் - 1

தமிழ்நாடு தனித்து வளர்ச்சியுற்றபின் வடநாட்டினும் அவர்க ளுக்கும் சரிநிலை உரிமை ஏற்படத் தமிழ்நாடு வகை செய்யும். எனவே நம் அரசியல் கட்சிகளுள் வடநாட்டு ஆக்கம் வலுக்கப் பாடுபடுபவை உண்மையில் மறைமுக அடிமை வாழ்வையே பெருக்கும். தமிழர் ஆக்கம் பெருக்க முனையும் கட்சிகளே உண்மையில் இந்தியாவில் விடுதலையையும் அடிப்படைப் பண்பாட்டு ஒற்றுமையையும் ஏற்படுத்தும்.

எதிர்காலத் தமிழகம் தனித்தியங்கி பிற மொழிகளுக்குத் தன்மதிப்பு வகையில் வழிகாட்டவல்ல தனித்தமிழ் வளர்த்து, ‘விடுதலை என்பதும் ஒற்றுமை என்பதும் சரிநிலையை அடிப் படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற உண்மைக்குச் சான்றாக விளங்க வேண்டும். உலகின் அடிமை இருளுக்கு இருப்பிடமாயியங்கும் தமிழகம் தனிமனிதர், தனிப் பகுதிகள் பின்னடையக் காணாத மக்கள் ஒட்டாது நாட்டினால், உலகம் அதனைப் பின்பற்றும் என்பது உறுதி.

இங்ஙனம் உலகிற்கும் இந்தியாவுக்கும் வழிகாட்டியாகவும் தமிழகத்துக்கு இன்றியமையா உயிர்நிலைச் சீர்த்திருத்தமாகவும் அமையத்தக்க முறைகளைத் தமிழர் திட்டம் என்ற இரண்டாம் பகுதியில் விளக்குவோம்.