இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
வளரும் தமிழ் 61 அதற்கெட்டாத உயர்வாழ்வில் குளிர் காயச் சென்ற இடங்களில் கூட, தமிழ்ப் பண்பு இவ்வாறு அவர்கள் நாடி நரம்புகளில் அதிர்கின்றது.
தமிழர் 'கன்னித் தாய்மொழி' யைப் புகழ்வதற்கு நெடுநாள் முன்னரே, அதைத் 'தெய்வப் பண்பு, 'முயற்சியற்ற இயற்கைப் பண்பு' என்று எண்ணி இறுமாப்புக் கொள்வதற்கு முன்னரே, ஆற்றாமை ஆறுதல் அடைவதற்கு முன்னரே, மனித அடிப்படையில், அறிவடிப்படையில், கலையடிப்படையில், அந்தக் 'கன்னித் தாய்ப் பண்பும்' அத்தெய்வீகப்பண்பின் அப்பெயர்கள் குறிக்கப் படாமலே உருவாக்கப்பட்டிருந்தன. அவ்வடிப்படைப் பண்புகளின் பல கூறுகள் வடஇந்தியாவில் பரவியதனாலேயே, உபநிடத, புத்த, சமண கால வடஇந்திய வாழ்விலும்,இறந்துபட்டவடஇந்தியத்தாய்மொழிவாழ்வுகளிலும், தொடக்கக் கால சமற்கிருத வாழ்விலும், உலக வாழ்விலும் தமிழ்ப் பண்போ டொத்த பல நல்ல உயிர்க்கூறுகளைக் காண்கிறோம். இவ்வுயிர்க் கூறுகளே ஆரிய நச்சுக் காற்று எட்டாத மேலை உலகக் கோடியில் நாகரிகமும் அறிவியலும் வளர்ந்துள்ளது. ஆயினும், ஆரியத் தொடர்பிலிருந்து நெடுந்தொலைவு விலகிய இன்றைய உலக நாகரிக மய்யமான மேலை உலகு, தமிழ்த் தொடர்பிலிருந்தும் அதுபோலவே விலகியுள்ளது. தான் தேய்ந்த போதும் உலகுக்கு ஒளிதரத் தவறாத திங்கள்போல, தான் ஆரிய நோயால் நலிவுற்ற போதும் உலக நாகரிகத்தை இரண்டாயிர ஆண்டு வளர்த்துள்ள தமிழன் ‘கன்னித் தாய்'ப் பண்பு, 'தெய்வப் பண்பு இடைக்காலக் களங்கம் நீக்கித் துலக்கப்படின், அது இன்னும் உலகுக்கு மீண்டும் ஒரு புதுவாழ்வு தரப் போதிய வளம் உடையது. தமிழகத்துக்கு அது புதுவாழ்வல்ல, புதுப் பெருமையே தரப் போதியதாயிருக்கும் என்று கூறத் தேவையில்லை. அக் கன்னித் 'தாய்ப் பண்பு', 'தெய்வப் பண்பு' ஆகியவற்றின் கூறுகளில் தமிழர், தமிழறிஞர், தமிழ் மாணவ மாணவியர் கருத்துச் செலுத்துதல் வேண்டும்.
அவற்றை இங்கே சுருக்கமாக வகுத்துக் கூறுவோம்.
1. சிந்துவெளி நாகரிகத்தைக் குறிப்பிட்டு விளக்கம் கூறும் டத்தில், இந்தியாவின் தேசிய முதல்வர், பண்டித ஜவஹர்லால்