62
அப்பாத்துரையம் - 1
நேரு சுட்டிக் காட்டும் உண்மை, சிந்துவெளி கால இந்தியாவுக்கு மட்டுமன்றி, சங்ககாலத் தமிழகத்துக்கும், புத்தர் கால வடஇந்தியாவுக்கும், பொருந்துபவை. அவர் ஆளும் இன்றைய தமிழகத்துக்கோ இந்தியாவுக்கோ பொருந்தாதவை.
பிறப்பாலும் மரபாலும் வடஇந்தியராயினும் வளர்ப்பாலும் அறிவாலும் மேலை உலக நாகரிகத்தின் பகுத்தறிவுச் செல்வ வளம் உடையவர் நேரு. அத்தகையவர் கண்கள் காணும் உண்மையையாவது தமிழர் கண் திறந்து காணுதல் வேண்டும்!
சமய
இன்றைய இந்தியாவின் பொதுமக்களுடைய ய வாழ்வின் அடிப்படைக் கூறுகள் அத்தனையையும் சிந்து வெளியில் காண்கிறோம். இக்கால மூட நம்பிக்கைகள் பலவற்றைக்கூட, புராணக் கதைகள் சிலவற்றைக்கூடக் காண் கிறோம். ஆனால், அய்யாயிர ஆண்டுகட்கு முற்பட்ட அன்றைய இந்திய நாகரிகம் இன்றைய இந்திய நாகரிகத்தைவிட, இன்றைய பல நாடுகளின் நாகரிகங் களைவிட, அடிப்படை மேம்பாடு உடையது. ஏனெனில், அந்நாளைய மக்கள் சமயம் மக்கள் வாழ்வின் பல கூறுகளுள் ஒரு கூறாய் இருந்தது. இன்றிருப்பது போல், மக்கள்வாழ்வு சமயத்தின் ஒரு கூறாய் இல்லை. எனவே, அன்று புரோகிதர் புரோகிதராக மட்டும் இருந்தனர். அவர்கள் இன்றிருப்பதுபோல், சமுதாயம், கல்வி, அரசியல் ஆகிய எல்லாவற்றையும் ஆட்கொண்டு, புரோகித இன ஆட்சி நடத்த வில்லை. மக்கள் வளர்ச்சியை எல்லாத் துறைகளிலும் தடுக்கும் 'பேரருளாளராக' அவர்கள் விளங்கவில்லை!
2.உழவுக்குத் தமிழர் மதிப்புக் கொடுத்தனர். உழவரை ஆரியர் ஆக்கியது போலத் தமிழர் கடைசி வருணம் ஆக்க வில்லை. அத்துடன் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், அணைகள் கட்டி உழவை வளர்த்த முதல் இனம் தமிழினமே. காடு வெட்டிக் கழனியாக்க, காட்டாற்றுக்குக் கரைகட்ட அரசியல் முறையில் திட்டமிட்ட முதல் நாடும் தமிழகமே. ஆனால், அதே சமயம் ஆங்கிலேயர் வரும்வரை, தமிழகம் இன்றைய தமிழகம் போலக் கிராம தேசமாகவோ, வெறும் உழவு நாடாகவோ இல்லை. உலகத்தின் வாணிகக் களமாக, செல்வச் சிகரமாக, தொழில் மய்யமாகத் தமிழகம் விளங்கிற்று. மக்களுள் மிகப்